ETV Bharat / state

RSS ஊர்வலம்: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு! - RSS rally and procession case - RSS RALLY AND PROCESSION CASE

RSS Rally and Procession Case: ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கக் கோரிய மனுக்களுக்கு செப்டம்பர் 24ஆம் தேதிக்குள் தமிழக அரசும், காவல் துறையும் பதில் அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் - கோப்புப்படம்
சென்னை உயர்நீதிமன்றம், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் -கோப்புப்படம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2024, 6:33 PM IST

சென்னை: விஜயதசமியை முன்னிட்டு அக்.6ஆம் தேதி தமிழக முழுவதும் 58 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அணி வகுப்பு மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆர்எஸ்எஸ் தரப்பிலும், திண்டுக்கல் மாவட்ட ஆர்எஸ்எஸ் தரப்பிலும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு கடந்த 9 மற்றும் 14ஆம் தேதிகளில் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விண்ணப்பங்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு மற்றும் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி திருப்பூர் ஆர்எஸ்எஸ் செயலாளர் ஜோதி பிரகாஷ் மற்றும் திண்டுக்கல் ஆர்எஸ்எஸ் இணைச் செயலாளர் சேதுராஜ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இதையும் படிங்க: அரசையே மக்கள் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.. வானதி சீனிவாசன் பேச்சு!

அந்த மனுக்களில், ஆர்எஸ்எஸ் அணிவகுப்புகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், இந்த ஊர்வலங்களுக்கு விதிமுறைகளை வகுத்து கடந்த ஜனவரி மாதம் உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், தமிழக அரசும்; காவல்துறையும் செப்டம்பர் 24ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.