சென்னை: பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் புதிதாக 20 ஆயிரத்து 375 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 76 நபர்களுக்கும், மேகாலயாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும் என 77 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 49 லட்சத்து 32 ஆயிரத்து 739 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் 34 லட்சத்து 53 ஆயிரத்து 756 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்குள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது.
மேலும் தமிழ்நாட்டில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 447 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும் சிகிச்சை பெற்றவர்களில் குணமடைந்த 34 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 15 ஆயிரத்து 284 என உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 59 நபர்களுக்கும்; செங்கல்பட்டில் 7 நபர்களுக்கும்; திருவள்ளூர் மாவட்டத்தில் மூன்று நபர்களுக்கும்; கோயம்புத்தூரில் இரண்டு நபர்களுக்கும்; திண்டுக்கல், கன்னியாகுமரி, தூத்துக்குடி, வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபர்களுக்கும், விமானத்தின் மூலம் அந்த ஒருவருக்கும் என 707 நபர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மாநிலத்தில் பரிசோதனை செய்யப்படுபவர்களில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 0.4 சதவீதம் ஆக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் சென்னையில் 2 சதவீதமாக தொற்று பாதிப்பு வீதம் அதிகரித்துள்ளது, செங்கல்பட்டில் 1.5 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் கரோனா பாதிப்பு 145 ஆக உயர்வு!