ETV Bharat / state

கரோனா தாக்கம்: இறப்பவர்களின் எண்ணிக்கையைத் தடுப்பதே முதல் நோக்கம்!

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையைத் தடுப்பதே, எங்களின் முதல் நோக்கம் என்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
author img

By

Published : Jun 28, 2020, 10:07 AM IST

சென்னை தண்டையார்பேட்டையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, காய்ச்சல் பரிசோதனை மருத்துவ முகாம்களில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக கரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன் அவர்களிடம் கூறியதாவது, 'கரோனா தொற்று பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சம் அடையாமல், அதற்கான சோதனையை உடனே செய்துகொள்ள வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்' என்று பாராட்டினார்.

’சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரையில் 39 ஆயிரத்து 537 தெருக்கள் உள்ளன. அதில் இதுவரை 9,550 தெருக்களில் மட்டுமே கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதுபோல பொதுமக்கள் முகக் கவசங்கள் கண்டிப்பாக அணிய வேண்டும். கைகளை கழுவுவதோடு, தகுந்த இடைவெளியுடன் செல்ல வேண்டும்' என பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

'மேலும் தமிழ்நாட்டில் கரோனா தொற்று ஏற்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையைத் தடுப்பதே எங்கள் முதல் நோக்கம்' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆந்திராவில், மரித்துப் போன மனிதநேயம், முதியவரின் உடல் ஜேசிபி மூலம் அகற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.