ETV Bharat / state

சென்னையை துரத்தும் கரோனா - இன்று 203 பேருக்கு பாதிப்பு!

author img

By

Published : May 3, 2020, 6:56 PM IST

Updated : May 3, 2020, 8:33 PM IST

chennai
chennai

18:38 May 03

சென்னை: கோயம்பேட்டிலிருந்து சொந்த ஊர்களுக்குச் சென்ற நபர்களால் தமிழ்நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவிவருவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று 203 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி ஆயிரத்து 937 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஒரே வாரத்தில் மேலும், 1000 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நோய்த்தொற்று அதிகளவில் பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதுடன் சமூக பரவலாக மாறியுள்ளதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. 

குறிப்பாக கோயம்பேட்டிலிருந்து தமிழ்நாட்டின் வட மாவட்டங்களான செங்கல்பட்டு, கடலூர் ,விழுப்புரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மற்றவர்களுக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  

இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள புள்ளி விபர அறிக்கையில், "தமிழ்நாடு முழுவதும் உள்ள 135 அரசு மற்றும் 14 தனியார் மருத்துவ ஆய்வுகளின் மூலம் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 107 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில்,  3 ஆயிரத்து 23 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 520 பேருக்கு நோய்த்தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. ஆயிரத்து 564 நபர்களின் சளி பரிசோதனை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டவர்களில், ஆயிரத்து 379 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

ஆயிரத்து 611 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. 10 ஆயிரத்து 617 பேருக்கு இன்று பரிசோதனை செய்யப்பட்டதில், 266 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டு கண்காணிப்பில் 37 ஆயிரத்து 206 நபர்கள் உள்ளனர். 40 பேர் அரசாங்கத்தால் விமான நிலையம் அருகில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சிகிச்சை பலனின்றி 30 பேர் உயிரிழந்துள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளது.  

கோயம்புத்தூரில் இருந்து புற்றுநோய் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 44 வயதானவர் கரோனா வைரஸ் நோய் தொற்றால் இறந்துள்ளார்.  அதிகபட்சமாக சென்னையில் இன்று  203 பேரும், விழுப்புரத்தில் ஒரே நாளில் 33 பேருக்கும், கடலூரில் 9 பேருக்கும், அரியலூரில் 2 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வரிசை எண்  
1சென்னை 1458
2கோயம்புத்தூர்  146
3திருப்பூர்  112
4செங்கல்பட்டு 93
5மதுரை 90
6விழுப்புரம் 86
7திண்டுக்கல் 81
8ஈரோடு 70
9திருவள்ளூர் 70
10திருநெல்வேலி 63
11நாமக்கல் 61
12தஞ்சாவூர் 57
13திருச்சிராப்பள்ளி 51
14நாகப்பட்டினம் 45
15தேனி  43
16கரூர் 43
17ராணிப்பேட்டை  40
18தென்காசி 40
19விருதுநகர் 32
20சேலம் 32
21திருவாரூர் 29
22தூத்துக்குடி 27
23கடலூர் 39
24காஞ்சிபுரம்  28
25வேலூர்  22
26திருப்பத்தூர் 18
27ராமநாதபுரம் 18
28கன்னியாகுமரி  17
29திருவண்ணாமலை 17
30கள்ளக்குறிச்சி  15
31சிவகங்கை 12
32நீலகிரி 9
33பெரம்பலூர்  9
34அரியலூர்  8
35புதுக்கோட்டை 1

Last Updated : May 3, 2020, 8:33 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.