இது குறித்து ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது.
![ஜாக்டோ-ஜியோ கரோனா நிதியாக ரூ.150 கோடி வழங்க முடிவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/whatsapp-image-2021-05-10-at-100717-pm-1_1005newsroom_1620665538_731.jpeg)
இத்தகைய ஒரு அசாதாரணமான சூழ்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 12 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடிப் பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, அனைத்து பணியாளர்களின் மொத்த ஒருநாள் ஊதியமான 150 கோடி ரூபாயை கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அரசிற்கு வழங்க முடிவு செய்துள்ளது.
![ஜாக்டோ-ஜியோ கரோனா நிதியாக ரூ.150 கோடி வழங்க முடிவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/whatsapp-image-2021-05-10-at-100717-pm_1005newsroom_1620665538_575.jpeg)
கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கு ஜாக்டோ-ஜியோ தனது மனமார்ந்த பாராட்டுதல்களையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வேளாண்மைக்கு தனி பட்ஜெட் உருவாக்கப்படும்: எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்