ETV Bharat / state

இதுவரை பெறப்பட்ட கரோனா நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா?

author img

By

Published : Apr 15, 2020, 5:01 PM IST

சென்னை: கரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ள நிதி விவரங்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

முதலமைச்சர் நிவாரண நிதி
முதலமைச்சர் நிவாரண நிதி

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிற்பித்துள்ளது. இதனால், நாட்டின் பொருளாதாரம் முடங்கியுள்ளது. கரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுக்காக்க, அனைவரும் தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கேட்டுக்கொண்டனர். இதன் காரணமாக இதுவரை கரோனா நிவாரண நிதியாக 134 கோடியே 63 லட்சத்து 54 ஆயிரத்து 364 ரூபாய் வந்துள்ளது. கடந்த 7 நாட்களில் மட்டும் 54 கோடியே 88 லட்சத்து 92 ஆயிரத்து 940 ரூபாய் வரை பெறப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை அளிக்கப்பட்டுள்ள நன்கொடையாளர்களின் விவரங்கள் – 15.4.2020

தமிழ்நாடு அரசு, கரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளுக்கு என முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து 6.4.2020 அன்று வரை, மொத்தம் 79 கோடியே 74 லட்சத்து 61 ஆயிரத்து 424 ரூபாய் பெறப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, 7.4.2020 முதல் 13.4.2020 ஆகிய ஏழு நாட்களில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதியுதவி வழங்கியவர்களின் விவரங்கள்:

* தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பணியாளர்கள் சார்பாக 14 கோடியே 10 லட்சத்து 72 ஆயிரத்து 492 ரூபாய்,

*அடாஸ் (Atos) சின்டல் ப்ரெயாஸ் கூட்டமைப்பு 5 கோடி ரூபாய்

* ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் 5 கோடி ரூபாய்

* சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் 3 கோடி ரூபாய்

*இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள் 2 கோடி ரூபாய்

*அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 1 கோடி ரூபாய்

* சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் 1 கோடி ரூபாய்

*தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம், கொங்குநாடு ஹாஸ்பிடல் பிரைவேட் லிமிடெட், ஸ்ரீ காளீஸ்வரி ஃபயர் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிலிருந்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 54 கோடியே 88 லட்சத்து 92 ஆயிரத்து 940 ரூபாய் வரப்பெற்றுள்ளது.

இதுவரை 134 கோடியே 63 லட்சத்து 54 ஆயிரத்து 364 ரூபாய் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. நிவாரணம் அளித்த நிறுவனங்கள், பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அனைத்துக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனசாமி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இதையும் பார்க்க: கரோனா - நிபுணர்கள் குழுவை அமைத்த மகாராஷ்டிரா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.