சென்னையில் உள்ள அனைத்து நட்சத்திர விடுதிகள், விடுதிகளிலும் கரோனா பரிசோதனை செய்துவருகிறது மாநகராட்சி. 15 மண்டலங்களிலும் உள்ள நட்சத்திர விடுதிகள், விடுதிகளில் 9,888 நபர்களில் 8,723 நபர்களுக்கு மாநகராட்சி பரிசோதனை செய்தது.
அதில் நட்சத்திர விடுதியில் 121 நபர்களுக்கும் சாதாரண விடுதியில் 15 நபர்கள் என 136 நபர்களுக்கு இதுவரை கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 664 நபர்களின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவேண்டியுள்ளது. புதிதாக சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக அடையாறில் உள்ள நட்சத்திர விடுதியில் 120 நபர்களுக்கும் அதற்கு அடுத்து ராயபுரத்தில் உள்ள சாதாரண விடுதியில் 11 நபர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.