ETV Bharat / state

அண்ணா பல்கலைக்கழகத்தில் 3 பேருக்கு கரோனா பாதிப்பு!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் 3 பேருக்கு கரோனா பாதிப்பு..!

author img

By

Published : May 23, 2022, 10:54 PM IST

சென்னை: ஐ.ஐ.டி.யில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த மாணவர்களால் கடந்த மாதம் கரோனா பரவத்தொடங்கியது. இதையடுத்து ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள விடுதிகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த பரிசோதனை முடிவில் 198 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ’அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலருக்கு கரோனா அறிகுறிகள் ஏற்பட்டன. இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 26 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டோம். அதில் 3 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த 3 பேரும் பல்கலைக்கழக வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக பிரத்யேக மருத்துவ குழு அங்கு விரைந்துள்ளது. கரோனா கண்டறியப்படும் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கை எடுத்துள்ளோம்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 37 பேருக்கு கரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.