ETV Bharat / state

நோயால் பாதிக்கப்படலாம் என கணக்கிட் பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு - கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

சென்னை: சென்னையில் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ள 3.47 லட்சம் நபர்களை தொடர்ந்து அரசு கண்காணித்து வருகிறது என அமைச்சர்கள் குழு தெரிவித்துள்ளது

Corona control measures minister panel meet

author img

By

Published : Jun 9, 2020, 3:24 AM IST

சென்னையில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களின் பொறுப்பு அலுவலர்களுடன் கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

அதில், மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு மண்டலத்திலும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள இந்திய ஆட்சி பணி அலுவலர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்களை நியமித்துள்ளார்.

கரோனா வைரஸால் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்திய மருத்துவத் துறையின் மூலம் கபசுரக் குடிநீர், ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

மேலும், வீடு வீடாக சென்று காய்ச்சல் உள்ளதா என கணக்கெடுக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தூய்மை பணியாளர்கள், வீடு வீடாக சென்று கணக்கெடுப்பவர்கள், பூச்சி தடுப்புத் துறை பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் மேற்பார்வை அலுவலர்கள் என மொத்தம் 38,198 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னைப் பள்ளி ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 10 நடமாடும் மாதிரி சேகரிப்பு மையங்கள் உள்பட 40 கரோனா வைரஸ் தொற்று கண்டறியும் பரிசோதனை மையங்கள் உள்ளன.

இதன் காரணமாக, சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 1.5 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள வைரஸ் தொற்று பாதித்த பகுதிகள் நுண் கண்காணிப்பு முறையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் பாதுகாப்பாக பயன்படுத்துவதற்காக போதுமான அளவு நடமாடும் கழிப்பறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவர்கள், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளின் உடல் நலனை 14 நாள்`களை தொலைபேசி மூலம் கண்காணித்து ஆலோசனை வழங்கி வருகின்றனர். பெருநகர சென்னை மாநகராட்சி நகர சுகாதார செவிலியர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் நோய் பாதிப்பு அதிகம் வர வாய்ப்புள்ளவர்களாக கணக்கிடப்பட்ட 3 லட்சத்து 47 ஆயிரத்து 380 நபர்களை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி Helpage India நிறுவனத்துடன் இணைந்து முதியோர்களை பாதுகாக்க ஒவ்வொரு நாளும் ஒரு தன்னார்வலர் சராசரியாக நூறு முதியோர்களை தொடர்பு கொண்டு நலம் விசாரித்து தேவையானவற்றை அறிந்து, உரிய தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களின் தேவைகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் உத்தரவின்படி, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கோவிட் வைரஸ் உள்ளவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக நாளொன்றிற்கு 100 காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஹோமியோபதி மருந்து (ஆர்சனிக் ஆல்பம்) கரோனா வைரஸ் தொற்று தடுப்பிற்காக தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 2 லட்சம் நபர்களுக்கான ஹோமியோபதி மருந்துகள் கொள்முதல் செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப்பணியாளர்களுக்கு இந்திய மருத்துவக் கழகம் பரிந்துரையின் பேரில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.

குடிசைப்பகுதி மக்களுக்கான சிறப்பு திட்டத்தின்படி, 98 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ஆயிரத்து 979 குடிசைப் பகுதிகளில் வாழும் சுமார் 30 லட்சம் மக்களுடைய உடல்நல விவரங்கள் கணக்கீடு செய்தல், எளிதில் பாதிப்புக்குள்ளாகும் மக்களை அடையாளம் காணுதல், கோவிட் 19 அறிகுறிகள் கண்டறிந்து, தற்காப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டு வருகிறது.

குடிசைப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு மீண்டும் பயன்படுத்தக் கூடிய துணியினாலான 3 முகக்கவசங்கள், ஊட்டச்சத்து மாத்திரைகள் மற்றும் கபசுரக் குடிநீர் ஆகியவை வழங்குதல், வீடு வீடாக சென்று தொற்று பாதிப்பு குறித்து கணக்கெடுத்தல், வைரஸ் அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாகவும், இறப்பு விகிதம் குறைவாகவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.