சென்னை, சூளைமேடு திருவள்ளூர்புரம் பகுதியில் வசித்து வரும் தம்பதிகள் மோகன் (57) மற்றும் கஜலட்சுமி(52). இவர் சென்னை துறைமுகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியராக பணிபுரிந்து வருகின்றார்.
இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி மோகன் மற்றும் கஜலட்சுமி ஆகியோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் இருவரையும் வீட்டிலேயே 30 நாட்கள் தனிமைப்படுத்தி, இருந்துகொள்ளுமாறு அறிவுரை கூறியுள்ளனர்.
ஆனால், இருவரும் அரசு உத்தரவை மீறி, வீட்டில் தங்காமல் முகக்கவசம் மற்றும் கையுறை அணியாமல் தெருவில் சுற்றி வந்துள்ளனர். இதனால் அந்தத் தெருவில் வசித்து வரும் பொதுமக்கள் சிலர் அளித்த தகவலின்பேரில், சுகாதாரத்துறை அலுவலர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
அப்போது இருவரும் உத்தரவை மீறி, வெளியே சுற்றுவது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் இருவரின் மீதும் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் இருவர் மீதும் பேரிடர் மேலாண்மை நோய் தொற்று தடுப்புச்சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: 'தேசியவாத காங்கிரஸார் கூட்டணிக்காக தேடிவந்தார்கள்'- பட்னாவிஸ்