தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 2,652 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும், இன்று(அக்.29) மட்டும் 4,087 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.
மக்கள் நல்வாழ்வு துறை அக்டோபர் 29ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், கரோனா தொற்றை கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்வதற்கு புதிதாக திருப்பூரில் தனியார் ஆய்வகம் ஒன்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 202 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 73 ஆயிரத்து 862 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்மூலம் 2,652 நபர்களுக்கு கரோனா நோய் தொற்று இருந்தது தெரியவந்தது. இதுவரை 95 லட்சத்து 42 ஆயிரத்து 700 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 7 லட்சத்து 19 ஆயிரத்து 403 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று தாக்கியிருந்தது.
இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 24 ஆயிரத்து 886 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் இருந்த நோயாளிகளில் 4 ஆயிரத்து 87 பேர் இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 83 ஆயிரத்து 464 உயர்ந்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்தவர்களில் தனியார் மருத்துவமனையில் 16 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 19 நோயாளிகளும் என மேலும் 35 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 53 என உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் கீழ்காணுமாறு;
சென்னை மாவட்டம்: 1,98,487
செங்கல்பட்டு மாவட்டம்: 43,316
கோயம்புத்தூர் மாவட்டம்: 42,776
திருவள்ளூர் மாவட்டம்: 37618
சேலம் மாவட்டம்: 27,007
காஞ்சிபுரம் மாவட்டம்: 25,420
கடலூர் மாவட்டம்: 23,110
மதுரை மாவட்டம்: 18,659
வேலூர் மாவட்டம்: 17,771
திருவண்ணாமலை மாவட்டம்: 17,497
தேனி மாவட்டம்: 16,207
விருதுநகர் மாவட்டம்: 15,405
தஞ்சாவூர் மாவட்டம்: 15,262
தூத்துக்குடி மாவட்டம்: 14,946
ராணிப்பேட்டை மாவட்டம்: 14,787
கன்னியாகுமரி மாவட்டம்: 14,841
திருநெல்வேலி மாவட்டம்: 14,176
விழுப்புரம் மாவட்டம்: 13,668
திருச்சிராப்பள்ளி மாவட்டம்: 12,426
திருப்பூர் மாவட்டம்: 12,497
புதுக்கோட்டை மாவட்டம்: 10,554
கள்ளக்குறிச்சி மாவட்டம்: 10,226
திண்டுக்கல் மாவட்டம்: 9,758
ஈரோடு மாவட்டம்: 10,127
திருவாரூர் மாவட்டம்: 9,559
நாமக்கல் மாவட்டம்: 8,939
தென்காசி மாவட்டம்: 7,810
நாகப்பட்டினம் மாவட்டம்: 6,640
திருப்பத்தூர் மாவட்டம்: 6,588
நீலகிரி மாவட்டம்: 6,556
கிருஷ்ணகிரி மாவட்டம்: 6,451
ராமநாதபுரம் மாவட்டம்: 5,988
சிவகங்கை மாவட்டம்: 5,865
தருமபுரி மாவட்டம்: 5,561
அரியலூர் மாவட்டம்: 4,356
கரூர் மாவட்டம்: 4,086
பெரம்பலூர் மாவட்டம்: 2,128
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 925
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 982
ரயில் மூலம் வந்தவர்கள்: 428