தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்தத் தொற்றுக்கு நேற்றுவரை தமிழ்நாட்ட்இல் 969 பேர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். மேலும், இந்த வைரஸுக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த 82 வயதுடைய முதியவர் ஒருவர் தப்லிக் ஜமாஅத் மாநாடுக்குச் சென்று திரும்பியுள்ளார். அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சுகாதாரத் துறை அலுவலர்கள் அவரை மீட்டு திருவள்ளூரில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சையளித்து வருகின்றனர்.
மேலும், அவருடைய மனைவி, மகன் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களது ரத்த மாதிரியை எடுத்து சோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர்கள் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து, அலுவலர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், அவர்கள் இருவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விழுப்புரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு கரோனா