ETV Bharat / state

கரோனா 3ஆவது அலை... குழந்தைகளுக்கான பிரத்யேக மையம்: நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் - கரோனா 3ஆவது அலையை சமாளிக்க குழந்தைகள் கோவிட் தடுப்பு மையம் தயார்

கரோனா 3ஆவது அலையின் தாக்குதலைச் சமாளிக்க, குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக கரோனா பராமரிப்பு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கரோனா 3ஆவது அலை... குழந்தைகளுக்கான பிரத்யேக மையம்: நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்

author img

By

Published : Jun 20, 2021, 5:37 PM IST

Updated : Jun 20, 2021, 5:47 PM IST

சென்னை: கோவிட் தொற்றின் மூன்றாவது அலையைச் சமாளிப்பதற்காக சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், உருவாக்கப்பட்டுள்ள குழந்தைகள் கரோனா பராமரிப்பு மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதன் காரணமாக, மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் வெகுவாகக் குறைந்து, நோய்த் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது.

எழும்பூரில் குழந்தைகளுக்கு கரோனா பராமரிப்பு மையம்

இந்நிலையில், கோவிட் தொற்றின் மூன்றாவது அலையைச் சமாளிப்பதற்கான ஆயத்தப் பணிகளில் ஒரு பகுதியாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் குழந்தைகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள பராமரிப்பு மையத்தைப் பார்வையிட்டார்.

இதில் 250 படுக்கை வசதிகளுடன் கூடிய பிரத்யேக பூஜ்ஜிய தாமத (Zero delay) குழந்தைகள் கரோனா பராமரிப்பு மையம் உருவாக்கப்பட்டிருந்தது.

நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்

இந்த மையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் அங்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இந்த மையத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிதீவிர சிகிச்சைப் பிரிவையும், அங்கு குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து மருத்துவக் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளதையும், ஆக்ஸிஜன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.

இதையும் படிங்க: 27 மாவட்டங்களில் திருமண நிகழ்ச்சிகளுக்கு இ-பாஸ் வழங்க அனுமதி

Last Updated : Jun 20, 2021, 5:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.