ETV Bharat / state

நபிகள் குறித்த சர்ச்சைப் பேச்சு; ஒன்றிய அரசுக்கு திருமாவளவன் கண்டனம்

நபிகள் குறித்த சர்ச்சைப் பேச்சினைப்பேசிய பாஜகவினர் மற்றும் ஒன்றிய அரசுக்கு எதிராக திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நபிகள் குறித்த சர்ச்சைப் பேச்சு; ஒன்றிய அரசுக்கு திருமாவளவன் கண்டனம்
நபிகள் குறித்த சர்ச்சைப் பேச்சு; ஒன்றிய அரசுக்கு திருமாவளவன் கண்டனம்
author img

By

Published : Jun 9, 2022, 3:18 PM IST

சென்னை அசோக்நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய திருமாவளவன், "கடந்த காலங்களில் கலைஞர், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள அம்பேத்கர் சுடர் விருது, இந்த ஆண்டு கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு வழங்கப்பட உள்ளது.

பெரியார் ஒளி விருது - எழுத்தாளர் எஸ்.வி. ராஜதுரை, காமராஜர் கதிர் விருது - வி.ஜி. சந்தோசம், அயோத்திதாசர் ஆதவன் விருது - ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். செல்லப்பன், காயிதே மில்லத் பிறை விருது - தெகலான் பாகவி, செம்மொழி ஞாயிறு விருது - தொல்லியல் அறிஞர் க. ராசன், மார்க்ஸ் மாமணி விருது - ரா. ஜவகர் ஆகியோருக்கும் வழங்கப்பட உள்ளது.

மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய சிந்தனையாளர்கள் கைகோர்க்க வேண்டும் என்பதை விசிக முழுமையாக நம்புகிறது. சமத்துவம் சார்ந்து கைகோர்த்து இயங்க வேண்டும். கண்ணகி, முருகேசன் கொலை வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக மாற்ற நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த நீதிமன்ற தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம்.

இந்திய ஒன்றிய அரசு ஆணவக்கொலை தடுப்பதற்குச்சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுகளின் கருத்துகளைக்கேட்டு கடிதம் எழுதி இருக்கிறது. ஒரு சில மாநிலங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இதில் கருத்து தெரிவிக்காத மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடும் இருக்கிறது என தகவல் கூறப்படுகிறது. ஆணவக்கொலை தடுப்புச் சட்டம் இயற்ற கடிதம் கொடுக்கப்பட வேண்டும். ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு இந்த அரசுக்கு கூடுதல் கவனம் இருப்பதாக நம்புகிறோம்.

சாதிய -மதவாத வன்கொடுமைகளை கண்காணிக்க தனி உளவுப்பிரிவு அவசியம்: சாதிய மதவாத வன்கொடுமைகளை முன்னெச்சரிக்கையாக தடுப்பதற்கு உளவுத்துறை ஒன்று தேவைப்படுகிறது‌. சாதிய மதவாத சக்திகளை கண்காணிக்க தனி உளவுப்பிரிவு பெரிதும் தேவைப்படுகிறது. பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் சரி செய்ய வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை. கூட்டணி அடிப்படையில் திமுக அரசு இதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.

நபிகள் குறித்த சர்ச்சைப் பேச்சு; ஒன்றிய அரசுக்கு திருமாவளவன் கண்டனம்
ஆர்எஸ்எஸ், பாஜக சங்பரிவார் அமைப்புகளில் வெறுப்பு அரசியலால் உலகளவில் இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முகமது நபிகள் நாயகம் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக விமர்சித்ததால் அரபு நாடுகள் இந்தியப்பொருட்களை அப்புறப்படுத்தவும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொய் கூறும் பாஜக: பாஜக எல்லா மதத்தையும் மதிக்கிறார்கள் என்று அப்பட்டமாக பொய் சொல்கிறார்கள். குறிப்பாக இஸ்லாமியத்தையும் கிறிஸ்தவத்தையும் எப்படி அவமதிக்கிறார்கள் என்பதற்குப் பல சான்றுகள் இருக்கின்றன. அனைத்து இஸ்லாமிய நாடுகளும் கடுமையான கண்டனத்தை எழுப்பியிருக்கும் நிலையில் இந்தியாவில் மோடி அரசு பின்வாங்குகிறது, இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நூபுர் ஷர்மா, நவீன் ஜிண்டாலையும் உடனடியாக கைது செய்து சிறைப்படுத்த வேண்டும்.

தீட்சிதர்கள் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தனி சமயப் பிரிவினர் என்கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்படுத்தாது என்று அவர்கள் பற்றிய விளக்கத்தைத் தருகிறார்கள். இது குறித்து உண்மை அறிய வேண்டும் என்றால் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்திட வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறை என்பது இந்துக்களுக்கு ஆனது. இந்து ஆகம விதிகளின்படி நடக்கக்கூடியது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் பல ஆயிரக்கணக்கான இந்துக் கோயில்கள் இருக்கின்றன. பலகோடி வருமானங்கள் வருகின்றன.

ஆயிரக்கணக்கான இந்துக் கோயில்களில் அவற்றில் வரக்கூடிய வருமான முறைகேடுகளுக்கும் ஒழுங்குசீர்கெடும் காரணங்கள் இருக்கின்றன என்பதை கண்டறிந்த பிறகுதான் வருமானத்தை முறையாக இந்துக்களின் நலன்களுக்கு பயன்படுத்துவதற்கும் இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்து சமய அறநிலையத்துறை என்பது இந்துக்களுக்கே எதிரானது போன்ற தோற்றத்தை உருவாக்குபவர்கள்‌ தற்குறியானவர்கள். பேரறிவாளன் விடுதலை தொடர்ந்து மீதமுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். 20 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்குப்பதிவு செய்யப்படாமலேயே ஈழத்தமிழர்கள் பலர் இருக்கிறார்கள்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் 10 ஆண்டுகள் உள்ளே இருக்கின்றனர். இது ஜனநாயகத்துக்கு முரணானது தமிழ்நாடு முதலமைச்சர் துணிந்து முடிவெடுத்து அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்" என கூறினார்.

இதையும் படிங்க: மயிலாடுதுறையில் சிக்கிய ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர்.. தமிழ்நாட்டில் 8 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.