ETV Bharat / state

சென்னையில் கரோனாவை கட்டுப்படுத்துவதில் சவால் - அமைச்சர் ஜெயக்குமார் - Minister Jayakuma

சென்னையில் மக்கள் அதிகமாக உள்ளதால் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார்  சென்னை செய்திகள்  சென்னை கரோனா செய்திகள்  கபசூரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி  கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன்  chennai news  chennai corona update  chennai corona live updates  corona spread in Chennai  Minister Jayakuma  சென்னையில் கரோனா
சென்னையில் கரோனாவை கட்டுப்படுத்துவதில் உள்ள சவால்
author img

By

Published : May 27, 2020, 4:03 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருக்கும் ராயபுரம் மண்டலத்தில் வீடு வீடாகச் சென்று கபசுரக் குடிநீர் வழங்கும் திட்டத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். இதில், சென்னை கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "கரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்க சென்னை சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலேயே சென்னையில்தான் மக்கள் அடர்த்தியாக வாழ்கிறார்கள். ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 5,600 முதல் 6 ஆயிரம் பேர்வரை வாழ்கின்றனர்.

ஆனால், சென்னை தவிர்த்து மற்ற இடங்களில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 500 முதல் 700 பேர்தான் வாழ்கின்றனர். இதனால்தான் சென்னையில் கரோனா பரவலைத் தடுப்பது மிகவும் சவாலாக உள்ளது. சென்னையில் குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மறு சுழற்சியில் உபயோகிக்கும் வகையில் முகக் கவசங்கள், வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு இதுவரை 16 லட்சம் முகக் கவசங்கள் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளன.

அமைச்சர் ஜெயக்குமார்  சென்னை செய்திகள்  சென்னை கரோனா செய்திகள்  கபசூரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி  கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன்  chennai news  chennai corona update  chennai corona live updates  corona spread in Chennai  Minister Jayakuma  சென்னையில் கரோனா
கபசுரக் குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க வந்த அமைச்சர்

சென்னையில் அதிகம் பாதிப்புக்குள்ளான ராயபுரம் மண்டலத்தில் தெருக்களில் ஆட்டோவின் மூலம் சென்று கபசுரக் குடிநீர், ஹோமியோபதி மருந்துகள் உள்ளிட்டவற்றை கொடுப்பதற்கான ஏற்பாடுகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. கபசுரக் குடிநீர் குடிப்பதால் எந்த ஒரு பின்விளைவுகளும் ஏற்படாது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்" என்றார்.

இதன் பின்பு பேசிய கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன், "சென்னையில் ஒரு கோடி மக்கள் இருக்கிறார்கள். மிகவும் அடர்த்தியான மக்கள் தொகை இருப்பதால் பாதிப்பு அதிகமாகி வருகிறது. ஒரு தெருவில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படும்போது அந்த தெருவில் உள்ள அனைவரையும் தனியாக தங்க வைத்து முழு பரிசோதனை செய்யப்படுகிறது.

கர்ப்பிணிகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை தனியாக தங்க வைக்க மாநகராட்சி சார்பில் மூன்று மருத்துவமனைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோய்த் தொற்று பரவாமல் தடுக்க அனைவரும் பொது வெளியில் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். கைகளை கழுவ வேண்டும். முதியோருக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்றவை இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தவேண்டும். இதைப் பெரும்பாலும் யாரும் செய்யாமல் இருப்பது வருத்தமளிக்கிறது" என்றார்.

இதையும் படிங்க: முகக் கவசம் அணியாதவர்களுக்கு அறிவுரை வழங்கிய இபிஎஸ்! துண்டை எடுத்து கட்டிக்கோங்க!!!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.