அரசு மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், ”கடந்த ஓராண்டுக்கு மேலாக கரோனா காலக்கட்டத்தில் ஓய்வின்றி பணியாற்றி வருகிறோம். காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதே திமுக ஆட்சியில் தான். இதுவரை காப்பீட்டுத் திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு பணி நிரந்தம் செய்யப்படவில்லை. தங்கள் ஆட்சியில் எங்களை பணிநிரந்தம் செய்ய கேட்கிறோம்.
மறைந்த திமுகவின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியால் தொடங்கப்பட்டது, முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம். முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதி தமிழ்நாட்டில் முதன்முறையாக மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அவருக்கு நன்றி. இத்திட்டம் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகின்றன.
ஆனாலும் ஒப்பந்த ஊழியர்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. விரைந்து எங்களது ஊதியத்தை அதிகப்படுத்தி, நிரந்தர பணி நியமனம் வழங்கும்படி கேட்டுகொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.