ETV Bharat / state

பொங்கல் பரிசுத்தொகுப்பில் தரமற்ற பொருள்களை வழங்கிய நிறுவனங்களுக்கு மீண்டும் ஒப்பந்தம் - டிடிவி தினகரன் கேள்வி

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டு அபராதம் விதிக்கப்பட்ட அதே நிறுவனங்களிடமிருந்து நியாய விலைக் கடைகளுக்காக பருப்பு மற்றும் எண்ணெய் வாங்குவதற்கு முடிவு செய்துள்ள திமுக அரசுக்கு கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனத்திற்கே மீண்டும் ஒப்பந்தம்..? - டிடிவி தினகரன்

author img

By

Published : Sep 30, 2022, 3:19 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டன. இந்த பொருள்கள் தரமற்றதாக பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் எழுந்தன. இதனால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு, தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை, கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும், அவற்றை வழங்கிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டார்.

  • பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டு அபராதம் விதிக்கப்பட்ட அதே நிறுவனங்களிடமிருந்து நியாய விலைக் கடைகளுக்காக பருப்பு மற்றும் எண்ணெய் வாங்குவதற்கு முடிவு செய்துள்ள தி.மு.க அரசுக்கு கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். (1/3) @CMOTamilnadu @mkstalin

    — TTV Dhinakaran (@TTVDhinakaran) September 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது. ஆனால், பொங்கல் பரிசுத்தொகுப்பில் தரமற்ற பொருட்களை வழங்கி கருப்பு பட்டியலில் சேர்க்க நிறுவனங்களுக்கு மீண்டும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டு அபராதம் விதிக்கப்பட்ட அதே நிறுவனங்களிடமிருந்து நியாய விலைக் கடைகளுக்காக பருப்பு மற்றும் எண்ணெய் வாங்குவதற்கு முடிவு செய்துள்ள திமுக அரசுக்கு கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். தரமற்ற பொங்கல் பரிசை மக்களுக்கு அளித்த நிறுவனங்கள் மீது முதலமைச்சர் ஸ்டாலின் எடுப்பதாக சொன்ன கடும் நடவடிக்கை இதுதானோ..? இப்படி பச்சையாக முறைகேட்டில் ஈடுபடுபவர்களை ஊக்குவித்துக்கொண்டே ஊருக்கு ஊர், மேடைக்கு மேடை, ‘நாங்கள் மட்டுமே உத்தமர்கள்’ என்று ஆட்சியாளர்கள் மார்தட்டிக்கொள்கிறார்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.