ETV Bharat / state

கலப்பட மருத்துவ முறையைத் திரும்பப் பெறாவிட்டால்...! எச்சரிக்கும் மருத்துவ சங்கம் - இந்திய மருத்துவ சங்கம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள கலப்பட மருத்துவ முறையை வரும் 14ஆம் தேதிக்குள் திரும்பப் பெறாவிட்டால் தொடர் போராட்டம் நடத்துவது குறித்து செயற்குழு கூடி முடிவு எடுத்து அறிவிக்கும் என இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

continued-protest-if-mixed-medicine-is-not-withdrawn-medical-association-to-warn

author img

By

Published : Feb 3, 2021, 11:45 AM IST

சென்னை: மத்திய அரசு கொண்டுவந்துள்ள கலப்பட மருத்துவமுறையைக் கண்டித்தும், அதனைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்திய மருத்துவ சங்கத்தினர் நாடு முழுவதும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அந்தவகையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கிரிஸ்வரி தனியார் மருத்துவமனை வளாகத்தில் இந்திய மருத்துவ சங்கத்தினர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கடந்த 1ஆம் தேதிமுதல் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் இந்திய மருத்துவ சங்கத்தின் அகில இந்திய தலைவர் ஜெயலால் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு அவர்களை வாழ்த்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்திய அரசு கலப்பட மருத்துவமுறையை அறிமுகம் செய்துள்ளது. அதனைத் திரும்பப் பெற வேண்டும். அலோபதி, சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட அனைத்து மருத்துவ முறைகளையும் ஒன்றிணைத்து கொண்டுவரப்பட்டுள்ள கலப்பட மருத்துவ முறையால் அலோபதி என்ற நவீன மருத்துவத்தின் தனித்தன்மை அழிந்துவிடும்.

மத்திய அரசு 90 விழுக்காடு மக்கள் விரும்பும் அலோபதி மருத்துவ முறையுடன், ஆயுர்வேதம் மருத்துவத்தையும் இணைக்கக் கூடாது. அறுவை சிகிச்சை குறித்து எந்தவிதப் பயிற்சியும் பெறாத ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்வதைப் பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இந்திய மருத்துவ சங்கத்தினர் போராட்டம்

எனவே மத்திய அரசு கலப்பட மருத்துவ முறையைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தியா முழுவதும் 50 இடங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் பங்குபெறும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் பிப்ரவரி 1 முதல் 14ஆம் தேதிவரை நடைபெற்றுவருகிறது.

வரும் 14ஆம் தேதி மாநில தலைநகரங்களில் பேரணி நடத்தப்படும். மத்திய அரசு எங்களது கோரிக்கையை ஏற்று கலப்பட மருத்துவ முறையைத் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், பிப்ரவரி 14ஆம் தேதி தேசிய செயற்குழு கூடி அடுத்தகட்டமாக தொடர் போராட்டத்தை அறிவிப்போம்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.