சென்னை அருகே பல்லாவரம் அடுத்த திரிசூலம் தொலகாத் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர், மகேஷ்(36). இவருக்குத் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன.
மகேஷ் கட்டட வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று இரவு மது போதையில் வீட்டிற்குச்சென்ற மகேஷ் தனது செல்போனை சார்ஜ் போட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கித்தூக்கி வீசப்பட்டு, மயக்க நிலையில் இருந்து உள்ளார்.
இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதனை செய்தபோது ஏற்கெனவே மகேஷ் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த பல்லாவரம் போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:மதுபோதையில் காவலரை தாக்கிய மூவர் கைது