தமிழ்நாடு தொழில் துறை சார்பாக கனெக்ட் (Connect) எனும் தொழில்துறைக் கண்காட்சி நவம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு ஆழ்வார்பேட்டை தனியார் விடுதியில் நேற்று (அக்.30) நடைபெற்றது. இதில் தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மை செயலாளர் சந்தோஷ் பாபு, ELCOT இயக்குநர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வை பற்றி கனக்ட் (Connect) தலைவர் சுரேஷ் ராமன் கூறுகையில், ”கனெக்ட் தொழில்துறைக் கண்காட்சி மூலம் அனைவரின் சிந்தனைகள் பரிமாற்றம் செய்ய உதவும். இதில் 100க்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதன்மூலம் முதலீடுகள் வராது ஆனால் கருத்துகள் பரிமாற்றம் நடைபெறும்” என்றார்.
தொடர்ந்து இதை பற்றி ’ELCOT’ இயக்குநர் விஜயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், கனக்ட் நிகழ்வுக்கு அரசாங்கம் எப்போதும் ஆதரவு கொடுத்து வருகிறது. தகவல் தொழில்நுட்பத்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு!