ETV Bharat / state

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு.. கருப்பு பலூன்களுடன் காத்திருக்கும் காங். நிர்வாகி? - சென்னை மாவட்ட செய்திகள்

Modi Visit: சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு பலூன்களை பறக்க விடுவோம் என தமிழ்நாடு காங்கிரஸ் பட்டியலின பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார்.

go back modi baloon
பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2024, 8:22 PM IST

சென்னை: கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா சென்னை, ஜவஹா்லால் நேரு விளையாட்டு அரங்கில் ஜனவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைக்கிறார். இந்நிலையில் சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வருகை கருப்பு பலூன்களை பறக்க விடுவோம் என தமிழ்நாடு காங்கிரஸ் பட்டியலின பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் "கல்வி நிறுவனங்களில் பாகுபாடு அற்ற நிலை, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என இந்திய இளைஞர்களுக்கு வாக்குறுதி அளித்து கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை 82 ஆயிரத்து 514 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்.

2022 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் எண்ணிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட விடாமல் மோடி அரசு தடை செய்துள்ளது. மோடி பிரதமர் ஆனதிலிருந்து தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

2022 -2023 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தற்கொலை செய்து இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. இவ்வளவு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? அவர்களது சமூகப் பொருளாதார வாழ்க்கை நிலை என்ன? இரண்டு முக்கிய விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

உண்மையை சொல்லப்போனால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களில் 95 சதவிகிதம் பேர் எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள். இந்தியாவில் இதுவரை தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் சமூக சாதிய தரவுகளை வெளியிடுமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் 4 மாணவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு வேலையில்லா திண்டாட்டமே காரணம். இத்தகைய வன்முறை போராட்டத்தை நாம் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. இருந்தாலும் இது போன்ற நிகழ்வுகள் மூலம் பிரதமர் நரேந்திர மோடி அரசு மீது இளைஞர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசே தூக்கி எறிய இளைஞர்கள் முன் வர வேண்டும். அதற்கு முன்னோட்டமாக நாளை சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வருகை கருப்பு பலூன்களை பறக்க விடுவோம்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு எதிராக போராட திட்டம்: வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட விவசாயி அய்யாகண்ணு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.