ETV Bharat / state

ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரை கர்நாடகத்தை அசைத்துப் பார்த்துள்ளது - தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் குஷி!

author img

By

Published : May 13, 2023, 3:11 PM IST

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருவதால், சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் பட்டாசு வெடித்து, காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் முன்னிலை வகித்து வருவதால்  சத்தியமூர்த்தி பவனில் பட்டாசு வெடித்து கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை: கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருவதால், சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் பட்டாசு வெடித்து அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரை, கர்நாடகத்தை அசைத்துப் பார்த்துள்ளது என காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவைவிட காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. கர்நாடக சட்டப்பேரவையில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை நோக்கி, காங்கிரஸ் முன்னேறி வருகிறது. இதனையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், மேளதாளத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியினர் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதுமட்டுமின்றி கட்சி நிர்வாகிகளான துணைத் தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் சிவ ராஜசேகரன், மாநில பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், மாநிலச் செயலாளர் ரஞ்சித் குமார், இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், எஸ்.சி.துறை துணைத் தலைவர் புரசை வின்சென்ட், ஜி.தமிழ்ச்செல்வன், ஆர்.டி.குமார் உள்ளிட்டோர் இனிப்பு வழங்கி தம் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

அரசுப்பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் வகையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாநில துணைத் தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி, "கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. கே.எஸ்.அழகிரி தலைமையில் நாங்கள் கர்நாடகத்தில் பிரசாரத்திற்கு சென்றபோது, பாஜக குறித்து 40% கமிஷன் ஆட்சி என்று பேச்சு பொருளாக இருந்தது.

இந்துக்கள் என்று சொல்லி அறநிலையத்துறை நிதியினை ஒதுக்கக் கூட 40% ஊழல் செய்துள்ளனர். மிகப்பெரிய ஊழல் ஆட்சி நடந்தது. அவர்கள் கொடுத்த ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை. கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதைப்போல், மத்தியிலும் பாஜக ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது. ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரை கர்நாடகத்தை அசைத்துப் பார்த்துள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 2019-ல் பாஜகவுக்கு தாவிய எம்எல்ஏக்கள் மீண்டும் பாஜக சார்பில் போட்டி - 2023ல் பாஜகவின் திட்டம் பலிக்குமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.