ETV Bharat / state

ஆயிரம் நபர்களைக் கூட்டிப் போராடினால் பாஜக எதிர்க்கட்சி ஆகிவிட முடியாது - கே.எஸ் அழகிரி - பாஜக தலைவர் அண்ணாமலை மீது அழகிரி குற்றச்சாட்டு

ஆயிரம் நபர்களைக் கூட்டிப் போராடினால் பாஜக எதிர்க்கட்சியாக ஆகிவிட முடியாது. காங்கிரஸ் கட்சியின் சாதாரண தொகுதி தலைவர் கூட 5 ஆயிரம் நபர்களைத் திரட்டுவார். பாஜக தலைவர் அண்ணாமலை சமூக வலைதளங்களில் அக்கப்போர் செய்து வருகிறார் என்று தமிழ்நாடு  காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.

கே.எஸ் அழகிரி
கே.எஸ் அழகிரி
author img

By

Published : Mar 26, 2022, 9:47 PM IST

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (மார்ச் 26) நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் அகில இந்திய அமைப்பு தேர்தல் பொறுப்பாளர் கௌரவ் கோகாய், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஸ்ரீ வல்ல பிரசாத், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. வி. தங்கபாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ் அழகிரி, "டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கை மார்ச் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற காரணத்தால் உறுப்பினர் சேர்க்கை பணியை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பின்பு இப்போது மீண்டும் அந்த பணிகளை தொடங்கியுள்ளோம். கடந்த ஒரு வாரமாக உறுப்பினர் சேர்க்கை பணி வேகமாக நடைபெற்று வருகிறது. அது குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

சமூக வலைதளங்களில் அக்கப்போர் செய்யும் அண்ணாமலை

சமூக வலைதளங்களில் காங்கிரஸ் கட்சி ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. விமர்சனம் என்பது வேறு அக்கப்போர் என்பது வேறு. பாஜக தலைவர் அண்ணாமலை சமூக வலைதளங்களில் அக்கப்போர் செய்து கொண்டு இருக்கிறார்.

மத்தியில் ஆளக்கூடிய, அக்கட்சியின் மாநில தலைவர், முதலமைச்சரைப் பற்றி தவறான கருத்தைத் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் 5 ஆயிரம் கோடி எடுத்துக் கொண்டு துபாய் சென்றுள்ளார் என்று சொல்லியிருக்கிறார்.

அப்படியானால் அதற்கு மத்திய அரசு எப்படி அனுமதித்தது? உளவுத்துறை எப்படி அனுமதித்தது? விமானத்தில் எவ்வாறு அவ்வளவு தொகையைக் கொண்டு செல்ல முடியும்? ஒரு குற்றச்சாட்டை சொல்ல வேண்டும் என்றால் அதில் குறைந்தபட்சம் உண்மையாவது இருக்க வேண்டும்.

நீதிமன்றத்தின் மூலம் பதில் சொல்ல வேண்டும்

தமிழ்நாட்டின் அரங்கினை திறப்பதற்காக முதலமைச்சர் சென்றுள்ளார். வெளிநாட்டு மூலதனம், வெளிநாட்டு தொழில் நுட்பத்தை பெறுவதற்காக சென்றுள்ளார். அதைப் பாராட்ட வேண்டும். இல்லை என்றால் எந்தெந்த வகையில் வெளிநாட்டு மூலதனத்தை பெற முடியும் என்ற ஆலோசனை வழங்க வேண்டும்.

ஆனால் அதையெல்லாம் செய்யாமல் 5 ஆயிரம் கோடி எடுத்துச் சென்றுள்ளார் என்று சொன்னால் அதற்கு அவர் நீதிமன்றத்தின் மூலமாக பதில் சொல்ல வேண்டும். பாஜக தலைவர் கூறும் கருத்துக்கு என்ன ஆதாரம் இருக்கிறது? ஒரு ஆர்ப்பாட்டத்தில் ஆயிரம் நபர்களைக் கொண்டு வந்தால் அவர்கள் எதிர்க்கட்சி ஆகிவிட முடியுமா?

எங்களது கட்சியின் சாதாரண தொகுதி தலைவர் கூட 5 ஆயிரம் நபர்களைத் திரட்டுவார். அதுவே ஆயிரம் நபர்களைத் கூட்டுவதெல்லாம் எதிர்க்கட்சிக்கு தகுதி ஆகிவிட முடியாது" என்று பேசினார்.

இதையும் படிங்க: துபாயில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.1,600 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.