ETV Bharat / state

பாஜக - திமுக கூட்டணியா? முற்றுப்புள்ளி வைத்த மு.க.ஸ்டாலின்! - Tamil Nadu cm mk stalin

மறுமலர்ச்சிக்கான பாதையில் காங்கிரஸ் உள்ளது. தேசிய அளவில் அக்கட்சி முக்கியத்துவத்தை இழந்துவிடவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
author img

By

Published : Dec 29, 2022, 7:47 AM IST

Updated : Dec 29, 2022, 9:24 AM IST

தேசிய அளவில் காங்கிரஸ் அதன் முக்கியத்துவத்தை இழக்கவில்லை, மீண்டும் மறுமலர்ச்சி பாதையில் செல்கிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேசிய அளவில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் அதன் முக்கியத்துவத்தை இழந்துவிட்டதாக நம்பவில்லை என்றும், பாஜகவை எதிர்க்கும் பெரும் கூட்டணியாக களமிறங்கும் எனவும் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் இப்போது மறுமலர்ச்சி பாதையில் செல்கிறது. பாஜகவின் அரசியலுக்கு சிறந்த மாற்று காங்கிரஸ் என்றார். நாட்டின் அரசியலமைப்பு அமைப்புகளின் சுதந்திரத்தை பாதுகாக்க பாஜகவை எதிர்த்துப் போராடுவதற்கு "தேசியக் கூட்டணியை" உருவாக்குவது முக்கியம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

மாநில அளவில் தேசியக் கட்சியுடன் வலுவான கூட்டணி அமைத்துள்ளது தமிழ்நாடு. நாடு முழுவதும் உள்ள மற்ற மாநிலங்களிலும் பின்பற்றக்கூடிய முன்மாதிரி தமிழ்நாடு என்று கூறினார். ராகுல் காந்தி, சித்தாந்த அடிப்படையில் பாஜகவை எதிர்த்துப் போராடுகிறார். காங்கிரஸ் தலைவரின் நடைப்பயணம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்றார்.

செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தை தொடங்கி வைத்ததாக அவர் தெரிவித்தார். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கத் தொடங்கியுள்ளன என்றும் அவர் கூறினார்.

கேள்வி: இமாச்சலப் பிரதேசத்தைத் தவிர, நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் மிகவும் மோசமான நிலையைப் பெற்றுள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அரசியல் வாய்ப்புகள் வீழ்ச்சியடைந்ததற்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்: காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் அதன் முக்கியத்துவத்தை இழந்துவிட்டதாக நான் எண்ணவில்லை. காங்கிரஸின் கட்டமைப்பை வலுப்படுத்த சோனியா காந்தி எடுத்துள்ள முயற்சிகள் பலன் தரத் தொடங்கியுள்ளன. மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது பரந்த அனுபவத்துடன் கட்சியை மறுமலர்ச்சிக்கு இட்டுச் செல்கிறார். சகோதரர் ராகுல் காந்தியின் நடைப்பயணம் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இது இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் மன உறுதி மேம்பட்டுள்ளது. காங்கிரஸ் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புவதுதான் இந்தியாவுக்கு இப்போது தேவை.

கேள்வி: ராகுல் காந்தியின் அரசியல் தலைமையை நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி ஆதரித்துள்ளீர்கள். குஜராத் தேர்தலில் தனது கட்சிக்கு பிரச்சாரம் செய்வதில் ராகுல் காந்தி இன்னும் குறிப்பிடத்தக்க பங்கை வகித்திருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? பாஜகவுக்கு வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுக்க, தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தியால் வழிநடத்த முடியும் என்று நம்புகிறீர்களா?

பதில்: ராகுல் காந்தியை நம்பிக்கைக்குரிய இளம் தலைவராக நான் பார்க்கிறேன். ப.சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்கள் குஜராத் தேர்தல் முடிவுகளில் காங்கிரஸின் செயல்பாடுகளை அலசி ஆராய்ந்து தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி முன்வைக்கும் வாதங்கள் முக்கியமானவை. அவர் பல விஷயங்களில் தெளிவான அணுகுமுறையைக் கொண்டுள்ளார். இந்தியாவின் பன்முகத்தன்மையே அதன் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கிறது என்பதை அவர் புரிந்துகொண்டார். வெறுப்பு அரசியலையும் மொழி ஆதிக்கத்தையும் அவர் எதிர்க்கிறார்.

இந்த குணங்களால் பாஜகவின் பார்ப்பனிய அரசியலுக்கு அவர் மாற்றாக உள்ளார். ராகுல் காந்தி சித்தாந்த அடிப்படையில் பாஜகவை எதிர்த்துப் போராடுகிறார். இதனால்தான் ராகுலை பாஜக குறி வைத்துள்ளது. இது உண்மையில் அவரது பலத்தை காட்டுகிறது.

கேள்வி: காங்கிரஸ் கட்சியுடனான தேர்தல் கூட்டணி இதுவரை திமுகவுக்கு எப்படி உதவியது என்று நினைக்கிறீர்கள்? காங்கிரஸுடன் திமுக கூட்டணி வரும் தேர்தல்களிலும் தொடருமா? இன்னும் குறிப்பாக 2024இல் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில்?

பதில்: நமது அரசியலமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் உறுதியாக உள்ளோம். தேசிய கூட்டணியை முன்மொழிகிறோம். தமிழ்நாட்டில் திமுக ஏற்கனவே அப்படி ஒரு கூட்டணியை அமைத்து, வெற்றி பெற்று மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது.

இதன் மூலம் பாஜகவுடன் கூட்டணி அமைக்க திமுக திட்டமிட்டு வருவதாக நாம் தமிழர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: எடப்பாடிக்கு பழனிசாமி மீண்டும் வெற்றி; மத்திய அரசு கொடுத்த புத்தாண்டு பரிசு!

Last Updated : Dec 29, 2022, 9:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.