தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து கோவைக்கு செல்ல காத்திருந்தனர்.
அப்போது அங்கிருந்த பயணிகளின் உடைமைகளை மத்தியத் தொழிற்படை காவல் துறையினர் சோதனையிட்டபோது, தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாரின் கைப்பையில் வெடிபொருள் இருப்பதாக சந்தேகம் எழுப்பப்பட்டது. தொடர்ந்து அவரது கைப்பையில் சோதனை செய்தபோது அதில் 17 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன.
இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தியதில், தான் துப்பாக்கி வைத்திருப்பதற்கான லைசென்ஸை வைத்திருப்பதாகவும், கைப்பையில் தோட்டா இருப்பது தெரியாமல் தன் பையை விமான நிலையம் கொண்டு வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து அவரது விமானப் பயணத்தை ரத்து செய்து, விமான நிலைய காவல் துறையினரிடம் தோட்டாக்கள் ஒப்படைக்கப்பட்டது. மயூரா ஜெயக்குமாரிடம் துப்பாக்கிக்கான ஆவணங்கள் கோரப்பட்ட நிலையில், விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: விமான பயணியிடம் சிக்கிய துப்பாக்கி தோட்டா!