ETV Bharat / state

கர்நாடக பாஜக எம்.எல்.ஏ மீது காங்கிரஸார் தமிழ்நாடு டிஜிபி-யிடம் புகார்! - தேசிய செய்திகள்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்யப்போவதாக பேசிய கர்நாடக மாநில சட்டமன்ற வேட்பாளர் மணிகண்டன் ரத்தோட் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழக காவல்துறை இயக்குநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Complaint to Tamil Nadu DGP against Karnataka state assembly candidate

author img

By

Published : May 9, 2023, 10:05 PM IST

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியுள்ளதாக கர்நாடக மாநில சட்டமன்ற வேட்பாளர் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, கையொப்பமிட்ட புகாரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச்செயலாளர்கள் இல.பாஸ்கரன், தளபதி பாஸ்கர், மற்றும் தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முத்தழகன், ஆகியோர் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள டிஜிபி அலுவலகத்தில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்து புகார் மனுவை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து டிஜிபி அலுவலகத்தின் வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் துணைத் தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி, 'கர்நாடகத்தில் சித்தாப்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் மணிகண்டன் ரத்தோட் என்பவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களின் குடும்பத்தினரையும் கொலை செய்வேன் எனப் பேசியுள்ளது கண்டனத்திற்குரியது. இதன் மூலம் கர்நாடகத் தேர்தலில் பாஜக வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

இதனைக் கண்டித்து தமிழக டிஜிபி அவர்களை சந்தித்து, இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் அளித்துள்ளோம். அவரும் இது குறித்து நடவடிக்கை எடுக்க பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் இதே போன்ற ஒரு புகார் அம்மாநில காவல்துறையினரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதன் மீது அவர்கள் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். அதேபோல் தமிழ்நாட்டிலும் வழக்குப்பதிவு செய்வார்கள் என உறுதியாக நம்புகிறோம். கர்நாடகத்தில் பாஜகவிற்கு தோல்வி பயம் வந்திருக்கும் காரணத்தினால் அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டு எப்படியாவது காங்கிரஸ் கட்சி அரியணையில் ஏறுவதைத் தடுக்க நினைக்கின்றார்கள்.

இது ஒரு போதும் நடக்காது. வன்முறையும் அராஜகமும் இந்தியாவில் ஒருபோதும் நடக்காது. அகிம்சையின் வழியிலே ராகுல் காந்தி பின்பற்றி வருகிறார். பாரத் ஜோடோ யாத்திரையின் வெற்றியும் அகிம்சையும் ராகுல் காந்தியின் முகமும் கர்நாடகத்தில் பிரதிபலிப்பதால், எங்களுடைய வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று வெளிவந்துள்ள நிலையில் பாஜக மிகப்பெரிய வன்முறை வெறியாட்டத்தை ஆட வேண்டும் என்று பாஜக சட்டமன்ற வேட்பாளர் பேசியுள்ளார். இதற்கு பாஜக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, தமிழ்நாடு டிஜிபி அவர்களிடம் புகார் மனு அளித்துள்ளோம். அப்புறம் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கே இதுபோன்ற நிலை என்றால் இந்தியத் துணை கண்டமே அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பது சமம் என்பதால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கையொப்பமிட்ட புகாரை தமிழக டிஜிபியிடம் வழங்கியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Breaking : தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் - அமைச்சர் நாசர் நீக்கம்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.