சென்னை கே.கே நகரை சேர்ந்தவர் கார்த்திக். பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் (மார்ச் 3) மாலை ஜாபர்கான் பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார்.
அப்போது ஏடிஎம் இயந்திரம் அருகே மூன்று ஐநூறு ரூபாய் கட்டுகள் கொண்ட 2 லட்ச ரூபாய் கேட்பாரற்றுக் கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கார்த்திக், பணத்தை எடுத்து எம்ஜிஆர் நகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் அங்கு சென்ற எம்ஜிஆர் நகர் காவல்துறையினர் பணத்தை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேட்பாரற்றுக் கிடந்த பணத்தை மீட்டு காவல் துறையினரிடம் ஒப்படைத்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கார்த்திக்குக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: பள்ளி மாணவனின் ரசிகரான டிஜிபி சைலேந்திரபாபு