ETV Bharat / state

5 ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்களுக்கு தேசிய தர நிர்ணய அங்கீகாரம்... வாழ்த்திய அமைச்சர் மா.சு

இந்தியாவிலேயே முதன்முறையாக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையின் கீழ் செயல்படும் 5 ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்கள் தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெற்றதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்து தெரிவித்தார்.

5 ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்களுக்கு தேசிய தர நிர்ணய அங்கீகாரம் பெற்றதற்கு வாழ்த்து...மா.சுப்பிரமணியன்

author img

By

Published : Aug 29, 2022, 7:37 PM IST

சென்னை: ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், இந்தியாவிலேயே முதன்முறையாக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையின் கீழ் செயல்படும் 5 ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்கள் தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெற்றதற்கான சான்றிதழை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறையில் 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மலேரியா, காசநோய், ஹீமோகுளோபின், ரத்த சர்க்கரை போன்றவற்றைக் கண்டறிய அடிப்படை வசதிகளைக்கொண்ட ஆய்வகம் செயல்பட்டு வருகிறது.

ஆய்வக ஆய்வுகளின் தரத்தை உறுதி செய்வதற்காக 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ஆய்வகங்கள், கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர் உயிர் வேதியியல் துறையின் வெளிப்புற தர உத்திரவாத சேவைகள் மூலம் இத்திட்டத்தில் பங்கேற்கின்றன. இதன் மூலம் ஆய்வக முடிவுகளின் தரம் மூன்றாம் தரவு திறன் சோதனை வழங்குநரால் மதிப்பிடப்படுகிறது.

இந்தியாவிலேயே அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் இயங்கும் ஆய்வகங்களுக்கும் தரக்கட்டுப்பாடு திட்டத்தை தமிழ்நாடு மட்டுமே செயல்படுத்தியுள்ளது. ஆய்வகங்களுக்கான தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியம் ஒரு அங்கமாகும். இது சர்வதேச தரத்தில் மருத்துவப் பரிசோதனை ஆய்வகங்களுக்கு ஆய்வக அங்கீகாரம் வழங்குகிறது. மருத்துவ ஆய்வகங்களுக்கான தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியம், தன்னார்வ அங்கீகார திட்டத்தின் மூலம் நிர்வகிக்கப்படும் சர்வதேச தரநிலை ஐஎஸ்ஓ 15189-ன்படி ஆய்வகங்கள் குறிப்பிடத்தக்க அளவில் தரத்தை எட்டியுள்ளன.

தற்பொழுது அடிப்படை ஆய்வகங்களுக்காக தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியம் ஒரு தன்னார்வத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மருத்துவ நுழைவு நிலை சோதனை ஆய்வகத் திட்டம் எனும் இத்திட்டத்தின் மூலம் தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற திறன் சான்று வழங்குநரிடமிருந்து மட்டுமே திறன் சோதனை சான்று பெறப்படும்.

தமிழ்நாட்டில் ஒரு புதிய முயற்சியாக பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறையின்கீழ் இயங்கும் 5 ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்கள் தேசிய தர நிர்ணய அங்கீகார வாரிய அங்கீகாரத்திற்கு விண்ணப்பித்து, நாட்டிலேயே முதன்முறையாக தர உறுதி சான்றிதழைப்பெற்றுள்ளன.

திருப்பூர் மாவட்டம், தளவாய்பட்டினம் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம்; திருப்பத்தூர் மாவட்டம், பாச்சூர் ஆரம்ப சுகாதார நிலையம்; இராமநாதபுரம் மாவட்டம், வெங்கிட்டாங்குறிச்சி கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம்; தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியத்தின் சான்றிதழ் கிராமப்புற சமூகத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இயங்கும் ஆய்வகங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது. பெங்களூருவில் நடைபெற்ற தேசிய அளவிலான மாநாட்டில் பொது சுகாதாரத்துறை இயக்குநர் மற்றும் 5 ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர்களுக்கு தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியம் இந்த தரச் சான்றிதழ்களை வழங்கியது.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்களும் படிப்படியாக இந்த அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச்செயலாளர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் உமா, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.செல்வவிநாயகம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:மணப்பாறையில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்.. உதயநிதி ஸ்டாலின் உறுதி...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.