ETV Bharat / state

மின் கட்டணம் செலுத்துவதில் குழப்பம்... பெண் தற்கொலை முயற்சி - பெண் தற்கொலை முயற்சி

சென்னை: மின் கட்டணம் செலுத்துவதில் வாடகைதாரருடன் ஏற்பட்ட குழப்பத்தால் மின்வாரியம் அதிக கட்டணம் வசூலிப்பதாக தவறாக நினைத்து தற்கொலைக்கு முயன்ற பெண் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்கொலை முயற்சி
தற்கொலை முயற்சி
author img

By

Published : Jul 20, 2021, 1:54 AM IST

சென்னை மாதவரம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் கௌதமன். இவரது மனைவி கருமாரி(43). இவர்களுக்கு சொந்தமாக வால்டாக்ஸ் சாலையில் பெருமாள் கோயில் கார்டன் நான்காவது தெருவில் சொந்தமாக வீடு உள்ளது. அதனை வாடகைக்கு விட்டுள்ளனர்.

கருமாரி மாதவரத்தில் இருப்பதால் நான்கு அறைகளில் இரண்டு அறைகளுக்கு உண்டான வாடகையை வசூலிக்கவும் மற்றும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை கட்டுவதற்கும் வீட்டில் குடியிருந்த ஒரு நபரிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.

கரோனா காலம் என்பதால் கடந்த ஏழு மாதங்களாக வீட்டில் வாடகைக்கு இருந்த நபர் மின் கட்டணம் கட்ட தவறியுள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்பே வீட்டின் மின் இணைப்பை துண்டிக்க மின்வாரிய ஊழியர்கள் வந்தபோது அவரிடம் வாடகைதாரர் உடனடியாக பணத்தை செலுத்திவிடுவதாக கூறியுள்ளார். இதனால் மின் இணைப்பை துண்டிக்காமல் மின்வாரிய ஊழியர்கள் திரும்பி சென்றனர். எனினும் மின் இணைப்பு பதிவேட்டில் இந்த வீட்டிற்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது என பதிவு செய்துள்ளனர்.

இதனை அறியாமல் இருந்த வீட்டின் உரிமையாளர் கருமாரி, தனது வீட்டின் மின் கட்டணம் செலுத்த சென்றபோது ஏற்கனவே கட்ட வேண்டிய 11,000 ரூபாயுடன், அபராதமாக 25 ஆயிரம் ரூபாய் சேர்த்து 36 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என கூறியுள்ளனர்.

இது தொடர்பாக மின் வாரிய அலுவலரிடம் அவர் கேட்டபோது, ”கருமாரி வீட்டிற்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக குறிப்பிடப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து மின்சாரம் பயன்படுத்தப்பட்டது. அந்த பயன்பாடு திருட்டுத்தனமாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டதாக கணக்கில் வரும். எனவே கடந்த நான்கு மாதங்களாக அவர்கள் பயன்படுத்திய மின் இணைப்பிற்கான தொகை மற்றும் அதற்கான அபராத தொகை என 15 ஆயிரம் ரூபாய் மற்றும் முந்தைய பாக்கி 11 ஆயிரம் ரூபாய் என சேர்த்து 36 ஆயிரம் ரூபாயை கட்ட வேண்டும்” என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது வாடகைதாரர் செய்த தவறுக்கு எப்படி பொறுப்பேற்பது என தெரியாமல் விழிபிதுங்கி நின்றுள்ளார், மேலும் தன்னிடம் 21,000 ரூபாய் இருப்பதாகவும் அதை முதலில் கட்டுகிறேன் மீதியை சேர்த்து பிறகு கட்டுகிறேன் என தெரிவித்துள்ளார். ஆனால் மின்வாரிய விதிகள்படி மொத்த பணத்தையும் கட்டினால் மட்டுமே மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும். மேலும் அடுத்த மாதத்திற்கான மின் கட்டணமும் முறையாக கணக்கிடப்படும் என தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கருமாரி அதிக மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மின் வாரிய ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வீட்டிற்கு சென்று தற்கொலைக்கு முயன்ற கருமாரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஸ்டான்லி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் வசதியோடு சிகிச்சை பெற்று வரும் கருமாரி ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.