ETV Bharat / state

சீட்டு முடிந்ததும் பூட்டு போட்ட பிரபல நகை கடை;சென்னையில் நகை சீட்டு கட்டியவர்கள் போலீசில் புகார் - Scheme money paid in Pranav Jewellers

Chennai Crime news: குரோம்பேட்டையில் உள்ள பிரணவ் ஜூவல்லர்ஸ் நகை கடையில் மாத நகை சீட்டு கட்டியவர்கள், சீட்டுகளை கட்டி முடித்த நிலையில் நகை கடை மூடிவிட்டு சென்றதாகவும், கடையில் வேலை பார்ப்பவர்களின் போன்கள் சுவிட்ச் ஆப் ஆகியதாலும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், தாங்கள் சீட்டு கட்டிய சுமார் ரூ.4 கோடி பணத்தை மீட்டுத் தரும்படி குரோம்பேட்டை காவல்நிலையத்தில் 150-க்கும் மேற்பட்டோர் புகாரளித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2023, 4:43 PM IST

சீட்டு முடிந்ததும் பூட்டு போட்ட பிரபல நகை கடை

சென்னை: குரோம்பேட்டையில் உள்ள பிரபல நகைக்கடையில் மாத நகை சீட்டு கட்டியவர்களுக்கு நகை திருப்பி தராததால் காவல் நிலையத்தில் குவிந்தனர். தமிழகம் முழுவதும் 'பிரணவ் ஜூவல்லர்ஸ் நகை கடை' என்ற பெயரில் குறுகிய காலத்தில் 7-க்கும் மேற்பட்ட கிளைகளை தொடங்கி நகை வியாபாரம் செய்து வந்தனர். அதில் ஒன்று, குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிளைகளும் பராமரிப்பு பணி நடைபெறுகிறது என சிறிய நோட்டீஸ் ஒட்டப்பட்டு கடை மூடப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணி என கூறி இரண்டு நாட்கள் ஆன நிலையில் கடை திறக்காததால் சந்தேகம் அடைந்த வாடிக்கையாளர்கள் கடையின் நிர்வாகிகள் மற்றும் கடையில் பணிபுரிபவர்களிடம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள முயச்சித்த போது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியுள்ளது.

கடை மூடி இருப்பதை அறிந்து மாதம் தோறும் நகை வாங்குவதற்காக சீட்டு கட்டியவர்கள் ஒரு வருடத்திற்காக மொத்தமாகவும் லட்சக்கணக்கில் பணத்தினை தங்க நகை ஒப்பந்தம் அடிப்படையிலும் முதலீடு செய்தவர்கள் எல்லாம் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ந்து போயினர். இந்த நிலையில் பணத்தை செலுத்தியவர்கள் ஒவ்வொரு கிளைகளாக சென்று அங்கும் கடை மூடிவிட்டு இருப்பதை பார்த்து விட்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர்.

இதேபோன்று, குரோம்பேட்டையில் உள்ள நகை கடையில் பணம் கொடுத்து ஏமாந்த பொதுமக்கள் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் இதுவரையில், 150-க்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரில் ஒவ்வொருவரும் 50 ஆயிரம் ரூபாய் முதல் லட்சக்கணக்கில் பணங்களை முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

அது மட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது, மாதம் தோறும் சீட்டு கட்டும் காலம் முடிவடைந்தப் பிறகு நகைகளைக் கேட்டதற்கு அடுத்த மாதத்தில் கொடுத்து விடுகிறோம் எனக் கூறி, நாட்களை கடத்தி வந்ததாகவும் கடைக்குள் வரும்போது எல்லாம் தங்க நகைகள் எதுவும் இன்றி கடை வெறிச்சோடியே காணப்பட்டதாகவும் தெரிவித்தனர். தற்சமயம் கடை மூடப்பட்டு உள்ளதால், தொடர்ந்து புகார் வந்த வண்ணம் உள்ளது.

குரோம்பேட்டை பிரணவ் ஜூவல்லர்ஸ் நகை கடையில் மட்டும் 150 பேர் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், அந்த தொகை, ரூ.4 கோடிக்கு மேல் உள்ளதாகவும் புகாரைப் பெற்று பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாற்றம் செய்ய உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இன்னும் அதிகப்படியானோர் புகார் அளிக்க வாய்ப்புள்ளது. இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தின் மீதானை ஆசை உங்களுக்கு இருக்கா? இதை கவனிங்க: தங்கத்தின் மீதான் ஆசை பலருக்கும் இருந்தாலும், அதனை பலராலும் மொத்தமாக வாங்க இயலாத காரணத்தால் இந்த மாதிரியான தங்க நகை சீட்டு திட்டத்தில் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமான வாங்கலாம் என எண்ணுவோம். சீட்டு திட்டத்தில் எத்தனை மாதத்திற்கு பணம் கட்டவேண்டும், எத்தனை மாதத்தில் திட்டம் முதிர்வடையும் என்பதை கவனிக்கவேண்டும், நகை சீட்டு திட்டம் முதிர்வடைந்த பிறகு நகையாக கிடைக்குமா? என்பன உள்ளிட்டவற்றில் உள்ள உறுதித்தன்மையை நாம் நன்கு அறிந்துகொள்ள வேண்டும்.

குறிப்பாக, பெரும்பாலான நகை கடைக்காரர்கள் நகை சேமிப்பு திட்டத்தில் தரும் பல்வேறு பரிசு பொருட்களை இலவசமாக தருவதாக நம்பி அவர்கள் செய்யும் மோசடியில் நாமாகவே சென்று விழாமல் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. சேமிக்கும் பழக்கம் நல்லது தான், அதை எந்த வழியில் செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.

இதையும் படிங்க: இலங்கை கடற்கொள்ளையர்களால் கடுமையாக தாக்கப்பட்டதாக நாகை மீனவர்கள் குற்றச்சாட்டு - நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.