தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சூப்பர் குட்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பல சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனத்தை ஆர்.பி. செளத்ரி நிர்வகித்து வருகிறார்.
இந்த நிலையில், ஆர்.பி. செளத்ரி மீது நடிகர் விஷால் தி.நகர் துணை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதில், "தான் தயாரித்த படங்களுக்கு ஆர்.பி. செளத்ரியிடம் பல லட்சம் ரூபாய் கடன் வங்கினேன். ப்ரோ நோட் மூலமாக பணத்தை பெற்ற நான், அதனை முறையாக திருப்பி கொடுத்து விட்டேன். பணத்தை திருப்பி செலுத்திய பின் நான் கையெழுத்திட்ட ப்ரோ நோட்டை ஆர்.பி. செளத்ரி திருப்பி தராமல் மோசடி செய்கிறார் " என விஷால் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.