ETV Bharat / state

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் லைகா புரொடக்சன்ஸ் புகார் - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புரொடக்சன்ஸ் புகார்
புரொடக்சன்ஸ் புகார்
author img

By

Published : Aug 5, 2022, 8:10 PM IST

பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் கத்தி, தர்பார், வந்தா ராஜாவா தான் வருவேன் போன்ற பல படங்களை தயாரித்ததுடன், பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று, இரண்டு மற்றும் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களையும் தயாரித்து வருகிறது. இந்நிலையில் லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் நீல்காந்த் நாராயண்கபூர் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

அதில் NPK narendramari என்ற பெயரில் கடந்த ஜூலை மாதம் மட்டும் 26-க்கும் மேற்பட்ட இமெயில்கள் அனுப்பி பணம் பறிக்கும் நோக்கில் செயல்படுவதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரபலமான சினிமா தயாரிப்பு நிறுவனமான தங்களின் பெயரை கெடுக்கும் முயற்சியிலும், பணம் பறிக்கும் முயற்சியிலும், தங்களுக்கு தொடர்பு இல்லாத தகவல்களுடன் மெயில்கள் அனுப்பப்பட்டுள்ளன.

குறிப்பாக கடந்த ஜூலை 12ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை பல வணிக சம்பந்தமான மற்றும் வங்கிக் கணக்குகள், செல்போன் நம்பர்கள் பலரைப் பற்றிய தகவல்கள் அடங்கிய மெயில்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் பெயரை கெடுக்கும் வகையில் பல்வேறு மெயில் முகவரிகளுக்கும் இது போன்ற தகவல்களை பரப்பி அவதூறு செய்வதாகவும், இது குறித்து கடந்த ஜூலை 12ஆம் தேதி சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விவசாயிகள் பயனடையும் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.