ETV Bharat / state

நடிகர் யோகி பாபு மீது காவல் நிலையத்தில் மோசடி புகார் - நடந்தது என்ன? - தமிழ் சினிமா செய்திகள்

Compliant against actor Yogi Babu: நடிகர் யோகி பாபு மீது தயாரிப்பாளர் ஹாசிர் என்பவர் காவல் துறையில் பணம் வாங்கிவிட்டு நடித்து தர மறுப்பதாக புகார் அளித்த நிலையில், வாங்கிய பணத்திற்கு படத்தில் நடித்துவிட்டதாக யோகி பாபு விளக்கம் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 20, 2023, 5:36 PM IST

Updated : Aug 20, 2023, 6:43 PM IST

சென்னை: பணம் பெற்றுக்கொண்டு படத்தில் நடிக்காமல் மோசடி செய்துவிட்டதாக நடிகர் யோகி பாபு மீது தயாரிப்பாளர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விருகம்பாக்கம் பகுதியில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருபவர் ஹாசிர். இவர் கடந்த 20 ஆண்டுகளாக 'ROOBY பிலிம்ஸ்' என்ற பெயரில் திரைப்பட நிறுவனம் நடத்தி வருகிறார். வண்டி, கன்னிமாடம், மங்கி டாங்கி உள்ளிட்ட பல திரைப்படங்களை இந்நிறுவனம் மூலம் தயாரித்து உள்ளார்.

இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு ஹாசிர், 'ஜாக் டேனியல்' என்ற திரைப்படத்தை தயாரிக்க முடிவு செய்தார். இந்த திரைப்படத்தை கௌசிக் ராமலிங்கம் இயக்க, நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் காமெடி நடிகர் 'யோகி பாபு' நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். மேலும் இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் யோகி பாபுவிடம் ரூ.65 லட்சம் பேசி முன்பணமாக தொகையாக ரூ.20 லட்சம் தயாரிப்பாளர் ஹாசிர் கொடுத்தார். ரூ.5 லட்சம் பணமாகவும், ரூ.15 லட்சம் காசோலையாகவும் கொடுத்ததாக தெரியவருகிறது. இந்த நிலையில், திரைப்பட சூட்டிங் தொடங்கியதும் நடிகர் யோகி பாபுவை நடிப்பதற்காக தயாரிப்பு நிறுவனம் அழைத்தது. ஆனால், அதற்கு யோகி பாபு வராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், அளித்த பணத்தை திருப்பி தரும்படி தயாரிப்பாளர் ஹாசிர் கேட்டபோது தராமல் இழுத்தடித்து வந்ததாகவும் தெரியவருகிறது. இதையடுத்து தயாரிப்பாளர் ஹாசிர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் யோகி பாபு மீது இன்று (ஆகஸ்ட் 20ஆம் தேதி) புகார் அளித்துள்ளார். இப்புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக, நடிகர் யோகிபாபுவிடம் கேட்ட போது, 'கடந்த 2020ஆம் ஆண்டு 'ஜாக் டேனியல்' என்ற திரைப்படத்தில் ஒப்பந்தமாகி தனது காட்சிகளை முழுவதுமாக நடித்து கொடுத்துவிட்டதாகவும், தயாரிப்பாளர் ஹாசிர் பாதியிலேயே படத்தை நிறுத்திவிட்டு பின்னர் பணத்தை திருப்பி கேட்டால் எப்படி கொடுக்க முடியும்' என்று அவர் தகவல் தெரிவித்து உள்ளார். மேலும், வாங்கிய பணத்திற்கு படத்தில் காட்சிகளை நடித்து கொடுத்துவிட்டதாக நடிகர் யோகிபாபு விளக்கம் கூறியுள்ளார்.

இதனையடுத்து ஜாக் டேனியல் படத்தின் இயக்குனர் கௌசிக் ராமலிங்கத்திடம் கேட்டப்போது, முதற்கட்ட படப்பிடிப்பு நடத்தி முடித்த பிறகு தயாரிப்பாளர் ஹாசிர் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நடத்தாமல் பணமில்லை என காலம் தாழ்த்தி வந்ததாகவும், ஒரு கட்டத்தில் ஜாக் டேனியல் படத்தை கைவிட்ட ஹாசிர், நடிகை ஷீலா ராஜ்குமாரை வைத்து 'பட்டாம்பூச்சியின் கல்லறை' என்ற படத்தை இயக்கி வருவதாக தெரிவித்து உள்ளார். படம் கைவிடப்பட்டதற்கான என்.ஓ.சி சான்றிதழை தனக்கு தயாரிப்பாளர் ஹாசிர் கொடுத்து சுமூகமாக முடித்து கொண்ட நிலையில், தற்போது யோகி பாபு மீது புகார் அளித்திருப்பது ஏன் என தெரியவில்லை? என அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: “கேப்டன் மில்லர்” படம் வெளிவரும் முன்பே மீண்டும் நடிகர் தனுஷ் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இணையும் புதிய படத்தின் அப்டேட்

Last Updated : Aug 20, 2023, 6:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.