ETV Bharat / state

பத்திரிகையாளர்களை இழிவாக பேசியதாக அண்ணாமலை மீது காவல்துறையிடம் புகார்

author img

By

Published : Jun 1, 2022, 8:51 AM IST

பத்திரிகையாளர்களைஇழிவாக பேசியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்களை இழிவாக பேசியதாக அண்ணாமலை மீது காவல்துறையிடம் புகார்
பத்திரிகையாளர்களை இழிவாக பேசியதாக அண்ணாமலை மீது காவல்துறையிடம் புகார்

சென்னை: சமூக ஆர்வலரான ஆர்.டி.ஐ செல்வம் இணையதளம் வாயிலாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் பாஜகவின் தமிழக மாநிலத் தலைவரான அண்ணாமலை தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி வருவதாகவும், யாராவது பாஜக குறித்து அவதூறாக பேசினால் அவர்களை அழிப்பேன் என்று பொதுவெளியில் வெளிப்படையாக பேசி வருவதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.

இதேப் போல கடந்த 27ஆம் தேதி சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது பத்திரிக்கையாளர்களை கேவலப்படுத்தும் விதமாக உள் நோக்கத்துடன் தொடர்ந்து அவமதிக்கும் விதத்தில் அண்ணாமலை செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இதனால் உடனடியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இணையதளம் வாயிலாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலினை வைத்து திமுக நாடகம் நடத்தி வருகிறது - ஜெயக்குமார் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.