ETV Bharat / state

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு - 1 லட்சத்து 38ஆயிரம் பேர் விண்ணப்பம்

பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைப் பெற்றது. இந்தப் பணியிடங்களுக்கு 1 லட்சத்து 38 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

பாலிடெக்னிக் விரைவுரையாளர் தேர்வு : 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பம்

author img

By

Published : Dec 7, 2021, 10:53 PM IST

சென்னை: பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைப் பெற்றது. இந்தப் பணியிடங்களுக்கு 1 லட்சத்து 38 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களில் பெண் தேர்வர்கள் 70 ஆயிரத்து 195 பேரும், ஆண் தேர்வர்கள் 67 ஆயிரத்து 804 தேர்வர்களும், 12 திருநங்கைகளும் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்தத் தேர்வில், 970 மாற்றுத்திறனாளிகளும் தேர்வு எழுதுகின்றனர்.

இவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்துதரப்பட்டுள்ளது. மேலும் 18 இணை இயக்குநர்களும், 530 கல்வித்துறை அலுவலர்களும் 150 தேர்வு மையங்களில் கம்ப்யூட்டர் மூலம் தேர்வு எழுதுகின்றனர்.

கம்ப்யூட்டர் மூலம் தேர்வு:

டிசம்பர் 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை, 15 பாடங்களுக்கு 5 நாட்கள் காலை, மாலை நேரங்களில் 10 பிரிவுகளாக தேர்வு கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படுகிறது.

டிசம்பர் 8ஆம் தேதி 23 ஆயிரம் நபர்களும், 9ஆம் தேதி 21 ஆயிரம் நபர்களும், 10ஆம் தேதி 24 ஆயிரம் நபர்களும், 11ஆம் தேதி 32 ஆயிரம் நபர்களும், 12ஆம் தேதி 36 ஆயிரம் தேர்வர்களும் எழுதுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் சென்னை, மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களைத் தவிர 34 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுத் தேர்வு நடைபெறுகிறது. தேர்வு முடிந்த பின்னர் தேர்வர்களுக்கு அவர்களின் விடைத்தாள் நகல் ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்:

மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தேச விடைகளை வெளியிட்டு, அதன் மீது கருத்துகளை தெரிவிக்க கால அவகாசம் அளிக்கும்.

அதன் பின்னர் இறுதி விடைகள் வெளியிடப்படும். அதில் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் ஒரு பணியிடத்திற்கு 2 நபர்கள் வீதம் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வுச் செய்யப்படுவார்கள்.

மேலும் தேர்வர்கள் பணிக்குச் சேராவிட்டால் அந்த இடத்தினை நிரப்புவதற்கும் தேர்வு எழுதியவர்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்படுவர் என ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.