முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 84 காவலர்களில் 13 பேரின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வீதம், இதுவரை 3.25 கோடி ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

எஞ்சிய நபர்களின் குடும்பங்களுக்கும் விரைந்து கரோனா இழப்பீட்டுத் தொகை வழங்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு அரசின் இச்செயலுக்கு பாமக இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், ”தமிழ்நாட்டில் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள காவல் துறையினரில் கரோனா தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
-
தமிழ்நாட்டில் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள காவல்துறையினரில் கொரோனா தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது!(1/3)#FrontLineWorkers #TNpolice
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) May 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">தமிழ்நாட்டில் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள காவல்துறையினரில் கொரோனா தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது!(1/3)#FrontLineWorkers #TNpolice
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) May 20, 2021தமிழ்நாட்டில் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள காவல்துறையினரில் கொரோனா தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது!(1/3)#FrontLineWorkers #TNpolice
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) May 20, 2021
கரோனா தாக்கி உயிரிழந்த காவல் துறையினரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று நேற்று கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மேலும் 36 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க இன்று (மே.20) ஆணையிடப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
கரோனா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ’கரோனாவால் பலியான காவலர்களின் குடும்பங்களுக்கு 3.5 கோடி இழப்பீடு’ - முதலமைச்சர் ஸ்டாலின்