ETV Bharat / state

மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் இழப்பீடு - etv bharat

மாவுப்பூச்சிகள் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் இழப்பீடு

author img

By

Published : Aug 19, 2021, 5:24 PM IST

சென்னை: 2021-2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வேளாண் நிதி நிலை அறிக்கைக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் , "நாமக்கல், சேலம், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பயிரப்பட்டுள்ள மரவள்ளிக் கிழங்கில் மாவுப்பூச்சி தாக்குதல் அதிகரித்திருப்பதை கவனத்தில் கொண்டு, அவற்றை கட்டுப்படுத்துவதற்கான தேவையான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மாவுப்பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள 10 மாவட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் 8 ஆயிரத்து 945 ஹெக்டேர் நிலங்களுக்கு ஒரு கோடியே 78 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.

மஞ்சள், உருளை, கேரட், மக்காச்சோளம், வெங்காயம், தக்காளி உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள், நிலக்கடலை, நெல், கம்பு, சாமை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடும் விவசாயிகள் அனைவரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை காப்பீடு செய்யலாம். இதற்கான மானியமாக ரூ.2,377 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்" என்றார்.

இதையும் படிங்க: சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு புத்தாக்க பயிற்சி, கணினி பயிற்சி - சபாநாயகர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.