ETV Bharat / state

தமிழ்நாட்டினரை திருமணம் செய்ததால் மறுக்கப்பட்ட வகுப்புச் சான்றிதழ் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி - Madras High Court

தமிழ்நாட்டினரை திருமணம் செய்து கொண்ட புதுச்சேரி பெண்ணுக்கு பிறப்பிடம் மற்றும் வகுப்புச் சான்றிதழ் மறுக்கப்பட்டது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டினரை திருமணம் செய்ததால் மறுக்கப்பட்ட வகுப்புச் சான்றிதழ் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

author img

By

Published : Oct 4, 2022, 7:34 AM IST

சென்னை: புதுச்சேரியை சேர்ந்த மருத்துவரான ஹேமா மருத்துவ மேற்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்காக பிறப்பிடச் சான்றும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றும் கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். ஆனால், தமிழ்நாட்டின் திருக்கோவிலூரைச் சேர்ந்தவரை ஹேமா மணந்து கொண்டதால், பிறப்பிடச் சான்று மற்றும் வகுப்புச் சான்று ஆகியவற்றை வழங்குவதற்கு புதுச்சேரி வட்டாட்சியர் மறுத்துள்ளார்.

இதனை எதிர்த்து மருத்துவர் ஹேமா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில், “நாட்டில் 90 சதவீதத்தினருக்கு, பிறந்தது ஓரிடமாகவும் பணியாற்றுவது வேறிடமாகவும் இருக்கிறது. எனது கணவர் திருக்கோவிலூரைச் சேர்ந்தவராக இருந்தாலும், புதுச்சேரிதான் எனது பிறப்பிடம். அது எப்போதும் மாறாது. எனக்குத் தேவையான சான்றிதழ்கள் வழங்க உத்தரவிட வேண்டும். புதுச்சேரியில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வில் என்னை அனுமதிக்க உத்தரவிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், “மருத்துவ மேற்படிப்பில் மனுதாரருக்கு ஒரு இடத்தை ஒதுக்கி வைத்து, அவரை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, மனுதாரருக்கு மாணவர் சேர்க்கை வழங்குவது தொடர்பாக எந்த இறுதி உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது. மேலும் இந்த மனுவுக்கு புதுச்சேரி மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான மத்திய குழு பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.

இதையும் படிங்க: மருத்துவ படிப்பை முடித்த மாணவர்களின் சான்றிதழை வழங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.