சென்னை: திருவிக நகர், அம்பேத்கர் கல்லூரி ஆகிய வாக்குச் சாவடிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட வளாகங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேற்று ( மார்ச். 15) நேரில் சென்று ஆய்வு நடத்தினார். துணை ராணுவ படையினர் தங்கும் இடங்களையும் பார்வையிட்டார்.
பின்னர் மேற்கொண்டு எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தி, தகுந்த அறிவுரைகளை அவர் வழங்கினார்.
இதையும் படிங்க : 'திமுக ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு!' - இது தங்கமணியின் எச்சரிக்கை மணி!