சென்னை: பம்மல் நாகல்கேனியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தோல் தொழிற்சாலை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது முத்துலிங்கம் என்ற ஊழியர் ஒருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்தார்.
இந்நிலையில் மத்திய தேசிய துப்புரவு பணியாளர்களின் ஆணையர் வெங்கடேசன் பம்மல் நாகல்கேனியில் தோல்தொழிற்சாலை கழிவுநீர் தொட்டியை இன்று (ஆக 21) ஆய்வு செய்தார்.
குற்றம் சாட்டிய ஆணையர்
பின்னர் தோல் தொழிற்சாலை உரிமையாளர்ரிடம் இது குறித்து கேட்டறிந்து பாதுகாப்பு சாதனங்கள் வழங்கபடவில்லையா என கேள்வி எழுப்பினார்.
மேலும்சுத்திகரிப்பு சரியான முறையில் உள்ளனவா எனவும் கேட்டறிந்து விஷவாயு தாக்கி இறந்த முத்துலிங்கம் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டதா எனவும் கேட்டறிந்தார்.
கடுமையான நடவடிக்கை
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆணையர் வெக்கடேசன், “இறந்த முத்துலிங்கம் பட்டியலினத்தை சேர்ந்தவர் என ஆதாரப்பூர்வமாக தெரியவந்தால், அவர் பணிபுரிந்த தொழிற்சாலை உரிமையாளர் மீது வழக்கு தொடரப்படும்.
ஆன்லைனில் தொழிற்சாலைகளை ஆய்வு செய்பவரை மத்திய அரசு நீக்க வேண்டும். பாதுகாப்பு இல்லாமல் செயல்படும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஒரு சமூக பிரச்னை.
பாதுகாப்பு துறை அலுவலர்கள், தொழில்துறை மற்றும் மாசு கட்டுப்பாடு அலுவலர்கள் உள்ளிட்டோர் சரியான முறையில் ஆய்வு செய்யாமல் உள்ளதால் அவர்கள் மீது வழக்கு தொடரப்படும்.
பாதுகாப்பு
வேலை செய்யும் ஊழியர்கள் பாதுகாப்பு சாதனங்கள் இல்லாமல் இது போன்ற வேலைகளை செய்யக்கூடாது. இதற்கு அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெகாசஸ் விவகாரம்: தலைமை வழக்கறிஞருக்கு கடிதம் எழுதிய திருமா எம்பி