சென்னை, மயிலாப்பூரில் தனியார் நிறுவனர் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் சூரி, பத்திரிகையாளர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
'பத்திரிகையாளர்கள் அல்ல, தியாகிகள்’
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், ”பத்திரிகையாளர்கள் என்று சொல்வதைவிட உங்களை தியாகிகள் என அழைப்பதுதான் சரியாக இருக்கும். மக்களைக் காப்பாற்றியதில் பத்திரிகையாளர்களுக்கு பெரிய பங்கு உள்ளது” என்றார்.
மேலும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்கள் என அறிவித்து முதலமைச்சர் மரியாதை செய்திருக்கிறார் எனத் தெரிவித்த சூரி, கரோனா எல்லாரையும் செஞ்சு, செதுக்கிவிட்டு போயிருப்பதாகவும் தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் தெரிவித்தார்.
100 விழுக்காடு தடுப்பூசி
தொடர்ந்து, மூன்றாவது அலை என்ற ஒன்று வரவே கூடாது எனவும், அவ்வாறு வந்தால் அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்த சூரி, மக்கள் 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: திரையிடப்படுவதற்கு முன்பே சர்வதேச விருதுகளைக் குவிக்கும் 'கூழாங்கல்'!