ETV Bharat / state

தலைகுப்புற கவிழ்ந்த கார் - காவல்துறை விசாரணை - கல்லூரி மாணவர்கள் ஏற்படுத்திய விபத்து

மதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய இளைஞர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளைஞர்களிடம் விசாரணை
இளைஞர்களிடம் விசாரணை
author img

By

Published : Dec 13, 2021, 7:42 AM IST

சென்னை: புளியந்தோப்பு பகுதியில் நேற்று முன்தினம் (டிசம்பர் 11) இரவு அதிவேகமாக சென்ற கார் திடீரென சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பாடி வண்டியில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே வாகனத்துக்குள் இருந்தவர்களை மீட்டனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், மருத்துவக் குழுவை வரவைத்து அவர்களுக்கு முதலுதவி செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணை சென்னையைச் சேர்ந்த கார்த்தி(22), விக்கி(21), மணிகண்டன்(22) என்பது தெரியவந்தது.

மேலும் மது அருந்திவிட்டு போதையில் பிரியாணி சாப்பிட சென்றபோது விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர். அதன் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: புதிதாக கட்டப்படும் சிவாலயத்தில் ஒருவர் கொலை - காவல்துறை விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.