ETV Bharat / state

ஆடம்பர வாழ்க்கை மோகம் - திருட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவி ! - mambalam railway station

சென்னை: ஆடம்பர வாழ்க்கை வாழ திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.

chennai
author img

By

Published : Nov 25, 2019, 6:23 PM IST

Updated : Nov 25, 2019, 6:58 PM IST

சென்னை ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கல்லூரி, பள்ளி மாணவிகளிடம் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக ரயில்வே காவல்துறை, மாநகர காவல்துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. திருட்டு சம்பவம் தொடர்பாக, ஏற்கனவே ரயில்வே காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாம்பலம் ரயில் நிலையத்தில் 4 கிராம் தங்க வளையல், கிரெடிட் கார்டுடன் தனது கைப்பை திருடு போய்விட்டதாகவும், அவருடன் பயணம் செய்த பெண் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் ரயில்வே காவல்துறைக்கு வினோதினி(18) என்ற மாணவி புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், திருட்டில் ஈடுப்பட்டு வந்த பெண் சென்னை குளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகள் மோகன பிரியா(21) என்பதும், அவர் சென்னையிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் இரண்டாமாண்டு பேஷன் டெக்னாலஜி படித்து வருவதும் தெரியவந்தது.

மேலும், அவரிடம் ரயில்வே கவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஆறு மாதத்திற்கு முன்பே இவர் ரயில் நிலையத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர். கல்லூரி மாணவி என்பதால் அவரது வாழ்க்கையை கருத்தில் கொண்டு காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இருந்தும், மோகன பிரியா தவறை திருத்திக் கொள்ளாமல், சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக பெற்றோர் பேச்சையும் மீறி தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து மோகன பிரியாவை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்த 4 சவரன் நகையை மீட்டு புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: உணவில் மயக்கமருந்து கலந்து பணம் நகைகள் கொள்ளை! - சமையல்காரர் கைது!

Intro:Body:சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கல்லூரி மாணவி கைது .

சென்னையில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளிடம் தொடர் திருட்டு சம்பவங்கள் பெறுவதாக ரயில்வே போலிசார் மற்றும் மாநகர போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இது தொடர்பாக, ரயில்வே போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாம்பலம் ரயில் நிலையத்தில் தனது கைப்பையை திருடு போய்விட்டதாகவும், அதில் 4 கிராம் வளையல் மற்றும் கிரெடிட் கார்டு ஆகியவை இருந்தது எனவும், எனது ரயிலில் எனது பக்கத்தில் பயணம் செய்த ஒரு பெண் மீது சந்தேகம் இருப்பதாக ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த வினோதினி (18) என்ற மாணவி மாம்பலம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வினோதினி அளித்த அடையாளங்களை வைத்தும் சிசிடிவி காட்சிகளை கொண்டும் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்த நிலையில், நேற்று மாம்பலம் ரயில் நிலையத்தில் ஒரு இளம்பெண் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி, அந்த பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது, பிடிபட்ட அந்த பெண் சென்னை குளப்பாக்கம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகள் மோகன பிரியா (வயது 21) என்பதும், அவர் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு பேஷன் டெக்னாலஜி படித்து வருவதும், இந்த தொடர் திருட்டில் ஈடுப்பட்டு வந்த பெண் என்பது தெரியவந்தது.

மேலும், அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது, மோகன பிரியா, ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

மேலும், அந்த பெண் 6 மாதத்திற்கு முன்பு இதே போல் ரயில் நிலையத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட போது பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளனர். ஆனால் கல்லூரி மாணவி என்பதால் அவளது வாழ்க்கையை கருத்தில் கொண்டு போலீசார் அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பி உள்ளனர்.

ஆனால், மோகன பிரியா தனது தவறை திருத்தி கொள்ளாமல் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக, தனது பெற்றோர் பேச்சையும் கேட்காமல் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்ததும், இவர் மீது சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் உள்ளதும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து மோகன பிரியாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 4 சவரன் நகையை மீட்டு புழல் சிறையில் அடைத்தனர்.Conclusion:
Last Updated : Nov 25, 2019, 6:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.