ETV Bharat / state

நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் மரணம்

சென்னை: திருவொற்றியூரில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார்.

Sea
Sea
author img

By

Published : Nov 6, 2020, 3:04 PM IST

சென்னை திருவொற்றியூர் ராஜா சண்முக நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் ராகுல் (19). இவர் திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார்.

நேற்று (நவம்பர் 5) பகல் 1.30 மணிவரை கல்லூரி ஆன்லைன் வகுப்பில் கலந்துகொண்ட ராகுல் பின்னர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து திருவொற்றியூர் காசிகோவில் குப்பம் அருகே கடலில் குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

Sea
உயிரிழந்த மாணவன் ராகுல்

அப்போது திடீரென்று தோன்றிய ராட்சத அலை ராகுலை கடலுக்குள் இழுத்துச் சென்றது இதனைப்பார்த்துவுடன் குளித்துக்கொண்டிருந்த மாணவர்கள் வெளியே ஓடிவந்து ராகுலை காப்பற்ற உதவியை நாடினர்.

இதனையடுத்து அப்பகுதி மீனவர்கள் கடலுக்குள் சென்று ராகுலைத் தேடினர். அதற்குள் ராகுல் உயிரிழந்த நிலையில், சடலமாக மிதந்தார். பின் ராகுலில் உடலை மீட்டு மீனவர்கள் கரைக்கு கொண்டுவந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருவொற்றியூர் காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து ராகுலின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுகாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின் இது குறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.