சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாம் அலை சற்று குறைந்துவருவதைக் கருத்தில்கொண்டு இன்றுமுதல் (செப்டம்பர் 1) பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற உள்ளன. முதற்கட்டமாக 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் சுழற்சி முறையில் வகுப்புகள் இன்றுமுதல் செயல்பட உள்ளன.
இந்நிலையில் மண்டல இணை இயக்குநர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குநர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அதற்கான வழிமுறைகளையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, பேரிடர் மேலாண்மைத் துறை ஆகியவை வெளியிட்டுள்ளன.
அதில் அரசு, அரசு உதவி பெறும் சுயநிதி கல்லூரிகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் கருத்தரங்குகள், கூட்டங்கள் உள்ளிட்டவை நடத்துவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி நடத்தும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் அவ்வாறு கருத்தரங்குகள், கூட்டம் போன்றவை நடத்தினால், முன்கூட்டியே கல்லூரி கல்வி இயக்குநருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று திறப்பு