ETV Bharat / state

கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை... - Meteorological Center

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்கு, வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யகூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை  கனமழை  மழை  வானிலை ஆய்வு மையம்  சென்னை செய்திகள்  சென்னை வானிலை ஆய்வு மையம்  மழை எச்சரிக்கை  rain update  rain  heavy rain  chennai news  chennai latest news  Chennai Meteorological Center  Meteorological Center  மீனவர்கள் எச்சரிக்கை
மழை
author img

By

Published : Jul 21, 2021, 1:31 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று (ஜூலை 21) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயமுத்தூர் தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட கடலோர மாவட்டங்கள் மற்றும் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும்; ஏனைய மாவட்டங்களில் அநேகமாக வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை  கனமழை  மழை  வானிலை ஆய்வு மையம்  சென்னை செய்திகள்  சென்னை வானிலை ஆய்வு மையம்  மழை எச்சரிக்கை  rain update  rain  heavy rain  chennai news  chennai latest news  Chennai Meteorological Center  Meteorological Center  மீனவர்கள் எச்சரிக்கை
கன மழை

இரு தினங்களுக்கு மழை

இதனைத்தொடர்ந்து ஜூலை 23, 24 தேதிகளில் நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யகூடும்.

வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூட்டும்.

சென்னை நிலவரம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 35, குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்கள் எச்சரிக்கை

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வட மேற்கு வங்க கடல் பகுதியில் ஜூலை 23 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

வங்க கடல்

இன்று (ஜூலை 20) தமிழ்நாடு கடலோரம், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லவேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

21.07.2021 - 24.07.2021 வரை: தமிழ்நாடு கடலோரம், மன்னார் வளைகுடா, ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

20.07.2021 - 24.07.2021 வரை: தெற்கு வங்க கடல், மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடை இடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல்

20.07.2021 - 24.07.2021 வரை: கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

20.07.2021 - 24.07.2021 வரை: தென் மேற்கு அரபிக்கடல், மத்திய மேற்கு அரபிக்கடல் மற்றும் வடக்கு அரபிக்கடல், பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: வெள்ளக்காடான சீனா- 12 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.