சென்னை: தந்தை பெரியாரின் 143ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாளாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் கொண்டாடப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் அரசு விழாவாக சமூகநீதி நாள் உறுதியேற்பு நிகழ்வு நடைபெற்றது. இதில், அமைச்சர்கள், அனைத்து துறை செயலாளர்கள், இயக்குனர், துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். முதலமைச்சர் ஸ்டாலின் சமூகநீதி நாள் உறுதி மொழி வாசிக்க அலுவலர்கள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.
முன்னதாக, தலைமைச் செயலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியாரின் படத்திற்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செய்தார்.
இதையும் படிங்க: திமுக அரசு சமூக நீதிக்கான அரசு - தொல். திருமாவளவன்