சென்னை: நாட்டின் 76ஆவது சுதந்திர தின விழா இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியக்கொடியை ஏற்றினார்.
இதனைத்தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், “எளிமை, இனிமை, நேர்மை, ஒழுக்கம், மனித நேயம், மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளமாக அண்ணல் காந்தி அடிகள் இருக்கிறார்.
இன்றைக்கு நாட்டுக்கு அவசிய, அவசரமான கொள்கைகள் இவைதான். இத்தகைய அனைத்து மனிதநேய கொள்கைகளும் கொண்ட "திராவிட மாடல்" ஆட்சியைத்தான் நாம் நடத்தி வருகிறோம்” என தெரிவித்தார்.
கோட்டை கொத்தளத்தில் 2ஆவது ஆண்டாக முதலமைச்சர் ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பன்முகத்தன்மையே இந்தியாவின் வலிமை - தேசியக்கொடி ஏற்றி வைத்து பிரதமர் உரை