ETV Bharat / state

CM Speech: நமக்குள் உள்ளது தேர்தல் உறவு அல்ல கொள்கை உணர்வு; தா.பாண்டியனுக்கு ஸ்டாலின் புகழஞ்சலி... - cm stalin speech in tha pandian tribute function in Chennai

CM Speech: திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தா.பாண்டியன் எப்போதும் கூறுவார். அதைத்தான் நாம் தற்போது பின்பற்றி வருகிறோம், நமக்குள் உள்ளது தேர்தல் உறவு அல்ல, கொள்கை உணர்வு என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தோழர் தா.பாண்டியன் படத்திறப்பு விழா
தோழர் தா.பாண்டியன் படத்திறப்பு விழா
author img

By

Published : Dec 27, 2021, 11:16 PM IST

சென்னை: CM Speech: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் படத்திறப்பு - புகழஞ்சலி கூட்டம் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்தத் தலைவர் தோழர் தா.பாண்டியன் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி எழும்பூர் பெரியார் திடலில் நடைபெற்றது. உருவப்படத்தை கம்யூனிஸ்ட் கட்சி மூத்தத் தலைவர் நல்லகண்ணு திறந்து வைத்தார். இதில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு புகழ் அஞ்சலி செலுத்தினர்.

தா.பாண்டியன் புகழ் நீடித்து நிற்கும்

இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசுகையில், "சிறுவயதிலிருந்தே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் தா.பாண்டியன் சிறந்த பேச்சாளர்களை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு. சென்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கட்டடத்தைக் கட்டி முடிக்க முக்கியப் பங்காற்றியவர். பல இளைஞர்களை இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சியில் ஈர்த்தவர். தா.பாண்டியன் புகழ் நீடித்து நிற்கும்" என்றார்.

தா.பாண்டியன் உருவப்படத்தை மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு திறந்து வைத்தார்
தா.பாண்டியன் உருவப்படத்தை மூத்தத் தலைவர் ஆர்.நல்லகண்ணு திறந்து வைத்தார்

நாம் தொடர்ந்து வழி நடத்திச் செல்ல வேண்டும்

தா.பாண்டியன் படத்தை திறந்து வைத்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணு பேசுகையில், "தா.பாண்டியன் அரசியல் கட்சியில் பேச்சாளர், எழுத்தாளர் என பன்முக ஆளுமை தன்மை கொண்டவர். மத வெறி கொண்ட பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என அதை எதிர்த்துத் தொடர்ந்து இறுதி வரை போராடியவர் தா.பாண்டியன். அவரது கொள்கையை நாம் தொடர்ந்து வழி நடத்திச் செல்ல வேண்டும். தா.பாண்டியன் அவர்களின் படத்தைத் திறக்க எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி" என்றார்.

எப்போதும் யாருக்கும் அஞ்சாத நபர் தா.பாண்டியன்

இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "தா.பாண்டியன் என்றாலே தலை தாழாத பாண்டியன் என்றுதான் பொருள் எப்போதும் யாருக்கும் அஞ்சாத நபராக மட்டுமே அவர் இருந்தார்.

திமுகவிற்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் உள்ளது வெறும் நட்பு அல்ல, இது ஒரு குடும்பம், சாதாரண குடும்பம் அல்ல கொள்கைக் குடும்பம். பாசிசத்திற்கு எதிராகத் தமிழ்நாடு மக்கள் ஏற்கெனவே பாடம் கற்று உள்ளனர். ஆனால், இந்தியா அளவில் புகட்ட வேண்டிய சூழல் உள்ளது. அதற்காக நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.

நமக்குள் உள்ளது தேர்தல் உறவு அல்ல கொள்கை உணர்வு; தா.பாண்டியனுக்கு ஸ்டாலின் புகழஞ்சலி

மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் ஆட்சி மாற்றம் வேண்டும் எனப் பேசியிருந்தார். தற்போது அவர் இல்லை என்பது கவலை அளிக்கிறது. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் எனச் சபதம் எடுத்தார், வெற்றி விழா கூட்டத்தில் சந்திப்போம் என முழங்கினார். இவ்வளவு பெரிய வெற்றியை அவர் பார்க்கவில்லை என்ற சோகம் வாட்டி வதைக்கிறது.

மரணத்திற்குப் பின்பும் சிவப்பு படையைத் தட்டி எழுப்பும் சிறப்பு

மரணத்திற்குப் பின்பும் சிவப்பு படையைத் தட்டி எழுப்பும் சிறப்பு கொண்டவர் தா.பாண்டியன். மிகப் பெரிய கருத்துகளைப் பாமர மக்களுக்குப் புரியும் அளவிற்குப் பேசக் கூடிய திறமைப் படைத்தவர். அரசியல் கடந்து இலக்கிய ஆளுமை பெற்றவர் தா.பாண்டியன், மேடைப் பேச்சு, எழுத்துலகம் எனச் சிறப்பாகச் செயல்பட்டவர். நித்தமும் எழுதியும், பேசியும், போராடியும், வாதாடியும் வந்தவர்.

  • சிவப்புத் துண்டையே தன் அடையாளமாகக் கொண்டு 50 ஆண்டுகாலம் அரசியல் - இலக்கிய மேடைகளை ஆட்சிசெய்து, இறுதிவரையிலும் கொண்ட கொள்கையில் உறுதிபட நின்ற தோழர் தா.பா. அவர்களின் திருவுருவப் படத்தினை அய்யா நல்லகண்ணு அவர்கள் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு செவ்வணக்கம் செலுத்தினேன். pic.twitter.com/0vKP9pPpdd

    — M.K.Stalin (@mkstalin) December 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தா.பாண்டியன் எப்போதும் கூறுவார். அதைத்தான் நாம் தற்போது பின்பற்றி வருகிறோம், நமக்குள் உள்ளது தேர்தல் உறவு அல்ல கொள்கை உணர்வு" என்று தெரிவித்தார்.

இதையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் பேசுகையில், தோழர் தா.பாண்டியனுக்கு புகழ் அஞ்சலி செலுத்தினர்.

போராடுவதில் பின் வாங்காத அணுகுமுறை

அதன் பின்னர் விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசுகையில், "தோழர் ஜீவா வரிசையில் அவரது வளர்ப்பாக இருந்து மொழி இனம் பிரச்னைகளில் ஈடுபட்டவர் தா.பாண்டியன். கொள்கையில் தெளிவு, போராடுவதில் பின் வாங்காத அணுகுமுறை உள்ளிட்டவை அவரது சிறப்புகள்.

தோழர் தா.பாண்டியன் படத்திறப்பு விழா
தோழர் தா.பாண்டியன் படத்திறப்பு விழா

இப்போது நான் எண்ணிப் பார்க்கிறேன்

அவரது முன் முயற்சியில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. ஒரு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முன் நின்று இலங்கை தமிழ்ப் பிரச்னையில் நிற்பது வரவேற்கத்தக்கது பாராட்டத்தக்கது. இலங்கைத் தமிழர் நலனில் அவர் எவ்வளவு அக்கறை கொண்டிருக்கிறார் என்பதை அப்போது நான் உணர்ந்தேன்.

அதை இப்போது நான் எண்ணிப் பார்க்கிறேன். இலங்கைத் தமிழர்கள் நலனில் கம்யூனிஸ்ட்களுக்கு அக்கறை உண்டு என்பதை வெளிப்படுத்தியவர் தா.பாண்டியன். சங் பரிவாரின் பாசிசத்தை வேரறுக்க நாம் ஒன்றிணைந்து நிற்பதே தா.பாண்டியனுக்கு நினைவேந்தல் செலுத்துவதாக இருக்கும்" என்றார்.

பாசிசத்தை அனுமதித்துவிடாதீர்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பால கிருஷ்ணன் பேசுகையில், "தா.பாண்டியன் கடைசி மூச்சு போகும்வரை கம்யூனிஸ்ட் சிந்தனைகள் உடனே இருந்தார்.

இலக்கிய பின்புலத்தைக் கொண்டார்கள் ஒரு சிலர்தான். அதில் ஒருவர் தா.பாண்டியனும். பாசிசத்தை அனுமதித்து விடாதீர்கள். அதைக் காலில் போட்டு மிதியுங்கள் எனக் கூறியவர் தா.பாண்டியன்.

தோழர் தா.பாண்டியன் படத்திறப்பு விழா தலைவர்கள் புகழ் அஞ்சலி

கடைசி மூச்சு இருக்கிற வரை தான் கொண்ட கொள்கையிலிருந்து போராடியவர் தா.பாண்டியன். பன்முகத் தன்மை திறமை கொண்டவர் தா.பாண்டியன்.
நாடு சந்திக்கிற இடர்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தில் கம்யூனிஸ்ட்களுக்கு பங்கு உண்டு. அந்த வகையில் ஜீவா, சங்கரய்யா இவர்கள் வரிசையில் இருப்பவர் தா.பாண்டியன்.

மோடியை மண்டியிடவைத்த திறமை டெல்லியில் போராடிய விவசாயிகளுக்கு உண்டு. அப்படிப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாகச் சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறைந்த தா.பாண்டியனுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்" என்று தெரிவித்தார்.

எந்தளவு தொண்டு செய்ய முடியுமோ..!

இதையடுத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், "தா.பாண்டியன் அவர்களை உருவாக்கியவர் சிற்பி ஜீவா அவர்கள். அவரை போன்ற ஒரு பேச்சாளரைக் காண முடியாது. கலை இலக்கியத்திற்கு எந்தளவு தொண்டு செய்ய முடியுமோ அந்த அளவிற்குத் தொண்டாற்றியவர் தா.பாண்டியன்.

ஜன சக்தியில் கடைசிப் பக்கத்தில் சவுக்கடி என்கிற பெயரில் வரும் அவரது எழுத்துகளைப் படிக்கின்ற பொழுது எதிரிகளுக்குச் சவுக்கடி விழுகிற சிலிர்ப்பு ஏற்படும்.

உயிர் பிரியும் வரை கொள்கைக்காக வாழ்ந்தவர் தா.பாண்டியன். தமிழுக்கு, தமிழ் இனத்திற்கு, சமூகத்திற்கு தொண்டாற்றியவர் தா.பாண்டியன்.அவரது நினைவு நம்மை விட்டு ஒரு போதும் அகலாது. தா.பாண்டியன் புகழ் என்றைக்கும் நிலைத்து இருக்கும்" என்று கூறினார்.

தா.பாண்டியன் படத்திறப்பு விழாவில் தோழர்கள்

எதிரும் புதிருமாகக் கூட இருந்திருக்கிறோம்

இதையடுத்து பேசிய, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, "தா.பாண்டியன் ராஜிவ் காந்தி உடன் நெருக்கமானவர். தேசியத்தின் மீதும், தமிழின் மீதும் மிகப்பெரிய பற்று வைத்து இருந்தார். தா.பாண்டியன் போன்ற சிறந்த தோழர்களைத் தமிழ்நாடு இழந்து வருவது தான் நமக்கிருக்கும் வருத்தம். மாபெரும் தியாகம் செய்தவர் தா.பாண்டியன்.

சாதியின் பெயரால் இனத்தின் பெயரால் மக்களைப் பிரித்துப் பார்க்கக் கூடாது என்று நினைப்பவர் தா.பாண்டியன். பல கூட்டணிகள் வந்து உள்ளது எதிரும் புதிருமாகக் கூட இருந்திருக்கிறோம்.

முதலமைச்சர் ஒரு சிறந்த தேரோட்டி

இந்தியாவில் உள்ள கூட்டணியை விடத் தமிழ்நாட்டில் உள்ள கூட்டணி மிகச் சிறந்த கூட்டணி. திருமா பேச்சு அற்புதமானது. இந்த தேசத்திற்கு வந்திருக்கிற பேராபத்திற்கு, எதிராக இருக்க வேண்டும் என்பதை அது வலியுறுத்தியது. இந்த கூட்டணியைச் செம்மையாகக் கையாண்டார் முதலமைச்சர் மு க. ஸ்டாலின்.

முதலமைச்சர் அவர்களை ஒரு சிறந்த தேரோட்டி என்று கூடச் சொல்லலாம். கூட்டணி என்ற தேரை சிறப்பாக ஓட்டினார். நிதானமாக யார் மனதும் புண்படாமல் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் எனப் போராடினார். அது தான், தமிழ்நாட்டில் மோடியின் வீழ்ச்சி" என்று தெரிவித்தார்.

நம் எதிரிகளுக்கும் அவர் ஒரு பாடமாகத் தான் இருப்பார்

இதையடுத்து திராவிடர் கழகம் தலைவர் கீ.வீரமணி பேசுகையில், "பெரியார் விருதை தா.பாண்டியன் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அதற்குள் இங்கு அவர் படமாக உள்ளார். விருதை விரும்பாதவர் தா.பாண்டியன். இங்கு இருப்பது அவருடைய படம் அல்ல; பொது வாழ்க்கையில் இருக்கக் கூடியவர்களுக்கு ஒரு பாடம். ஏன் நம் எதிரிகளுக்கும் அவர் ஒரு பாடமாகத் தான் இருப்பார்.

அவரது முழக்கங்கள் நம்மை வழி நடத்தும், யாருக்காகவும் அவர் தன் கருத்துகளை மாற்றிக் கொள்ள மாட்டார். பாசிச பாம்பு படமெடுத்து ஆடுகிறது. அதற்கு எதிரான ஒரு அணியாக இந்த படத் திறப்பு விழா இருக்கிறது.

தோழர் தா.பாண்டியனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் புகழஞ்சலி

அவர்களை எதிர்க்க தமிழ்நாட்டில் முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இங்கு முதலமைச்சர் இருக்கிறார். அவர் இந்தியாவிற்கே தலைமை வகிக்கத் தகுதியானவர். மதவாத பாம்பின் நச்சுப் பல்லை பிடுங்கி எறிய வேண்டும். அதற்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஸ்டாலின்கள் வர வேண்டும்" என்று கூறினார்.

இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா பேசுகையில், "இந்தியா போன்ற வளர்கிற நாடுகளை அமெரிக்க ஏகாதிபத்திய நாடுகள் கொள்ளையடித்து வருகின்றன. ஏகாதிபத்தியத்தை எவ்வாறு தோலுரித்து அதற்கு எதிராகப் போராடியவர், சனாதனத்திற்கு எதிராகவும் போராடியவர். மாநிலத்தின் உரிமைகளை மத்திய அரசு பறிக்க முயற்சி செய்தால் அதை எதிர்த்துப் போராட வேண்டும் எனக் கூறியவர்.

டெல்லியில் உள்ள மோடி ஆட்சி மாநில உரிமைகளைப் பறிக்கிறது, அரசியலமைப்பைச் சீர் குலைக்கிறது. அம்பேத்கரின் சித்தாந்தங்களை ஆர்எஸ்எஸ் தகர்க்க வேண்டும் என நினைக்கிறது. ஆர்எஸ்எஸ்-ன் நேரடி கட்டுப்பாட்டில் பாஜக உள்ளது. இந்தியாவிற்கு ஆர்எஸ்எஸ் மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

அதுவே தா.பாண்டியனுக்கு செய்யும் அஞ்சலி

அதை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அதுவே, தா.பாண்டியனுக்கு செய்யும் அஞ்சலியாக இருக்கும். இந்தியாவில் பொது உடைமை வளர வேண்டும். அப்பொழுது தான் அனைவருக்கும், அனைத்தும் கிடைக்கும். தா.பாண்டியன் விட்டுச் சென்ற பணியை அனைவரும் ஒன்று பட்டுப் போராட வேண்டும். இந்தியாவைக் காப்பாற்றுவதற்காக, இந்தியாவின் கூட்டாட்சியைக் காப்பாற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.

எங்களைப் போன்றவர்களுக்கு...

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல் முருகன் பேசுகையில், "நான் சட்டமன்றத்தில் பேசியதைப் பார்த்து என்னைச் சிறந்த பேச்சாளர் எனப் பாராட்டியவர். தா.பாண்டியன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதே அரசு மருத்துவமனையில் மட்டுமே சிகிச்சை பெற்றார். இது எங்களைப் போன்றவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகத்தான் உள்ளது" என்றார்.

தா.பா போல் இன்னும் பலர் உருவாக வேண்டும்

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பேசுகையில், "பல்வேறு ஆற்றல்களைக் கொண்டவர் தா.பாண்டியன். ஆங்கிலத்தில் சிறப்பாக உரையாற்றும் ஆற்றல் உடைவர். கொள்கை எதிரிகளை புரட்டி போடும் ஆற்றலுடன் பேசுபவர். சிறுபான்மையினரை இன அழிப்பு செய்ய வேண்டும் எனும் சங்பரிவார் பேசும் சூழலில், பாண்டியன் போல் இன்னும் பலர் உருவாக வேண்டும். அவர் வழியில் பாசிசத்தைத் தொடர்ந்து எதிர்ப்போம்" என்றார்.

இதையும் படிங்க: இறுதி மூச்சுவரை வர்க்கப் போராளியாக வாழ்ந்த தா. பாண்டியன்!

‘சாயம் போகாத சிவப்புத் துண்டுக்காரர் தா.பா’

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.