ETV Bharat / state

'செஸ்' அதிர்ஷ்டத்தை நம்பிய விளையாட்டு அல்ல; அறிவை நம்பிய விளையாட்டு - முதலமைச்சர் ஸ்டாலின்

author img

By

Published : Jul 28, 2022, 11:05 PM IST

44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “செஸ் விளையாட்டு அதிர்ஷ்டத்தை நம்பிய விளையாட்டு அல்ல, அறிவை நம்பிய விளையாட்டு’’ எனத் தெரிவித்துள்ளார்.

விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்
விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி தொடக்க
விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 28) பங்கேற்று உரையாற்றினார். அப்போது, “நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு இன்றைய தினம் பன்னாட்டு அங்கீகாரம் கிடைக்கும் வகையில், இந்த அரங்கில் தொடக்கவிழாவானது மிக எழுச்சியோடு, ஏற்றத்தோடு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

இந்த விழாவிற்கான அழைப்பிதழுடன் டெல்லி சென்று நம்முடைய பிரதமர் அவர்களைச் சந்தித்து நேரில் அழைக்கலாம் என்று நான் திட்டமிட்டு இருந்தேன். ஆனால் இடையில் எனக்கு ஏற்பட்ட கரோனா தொற்று காரணமாக நேரில் செல்ல இயலாத ஒரு சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த என்னை நலம் விசாரிப்பதற்காக பிரதமர் தொடர்பு கொண்டார்.

என்னை நலம் விசாரித்த அவர்களிடத்தில், எனது நிலையை நான் விளக்கினேன். அவர் பெருந்தன்மையோடு சொன்னார், 'நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் - நான் நிச்சயம் கலந்துகொள்வேன் - இந்த விழாவானது இந்தியாவுக்கே பெருமை தரக்கூடிய விழா' என்று பிரதமர் குறிப்பிட்டார். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி இங்கே வருகைப் புரிந்திருக்கிறார்கள்.

44ஆவது பன்னாட்டு ஒலிம்பியாட் போட்டி என்பது ரஷ்ய நாட்டில்தான் நடப்பதாக முதலில் சொல்லப்பட்டது. கரோனா மற்றும் சில பிரச்னைகள் காரணமாக, ரஷ்யாவில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. வேறு எந்த நாட்டில் நடைபெறலாம் என்பதற்கான ஆலோசனைகள் நடந்ததை அறிந்து, இந்தியாவில் நடக்கும் வாய்ப்பு வருமானால், தமிழ்நாட்டில் நடத்தும் வாய்ப்பை நாம் பெற வேண்டும் என்று அமைச்சர்களுக்கும் அலுவலர்களுக்கும் நான் உத்தரவிட்டேன்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், இது பற்றி நமக்கு தகவல்கள் கிடைத்தன. கடந்த மார்ச் 16ஆம் நாள் இதற்கான முறையான அறிவிப்பை நான் வெளியிட்டேன். இந்த விளையாட்டுப்போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக 18 துணைக் குழுக்களை தமிழ்நாடு அரசு உருவாக்கியது.

இதுபோன்ற பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச்செய்வதற்கு குறைந்தது 18 மாதங்களாகும் என்பார்கள். ஆனால், நான் பெருமையோடு சொல்கிறேன், நான்கே மாதங்களில் பன்னாட்டுப் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு சிறப்பாகச்செய்திருக்கிறது.

இதற்குக் காரணமான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த அனைத்து அலுவலர்களையும், இதற்குத் துணைநின்ற அனைத்துத் துறை அலுவலர்களையும் நான் மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.

44ஆவது பன்னாட்டு சதுரங்க ஒலிம்பியாட் போட்டி என்பது உலக அளவில் தமிழ்நாட்டின் மீது கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சியாக இன்று தொடங்கியுள்ளது. இப்போட்டியின் மூலமாக தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறை மட்டுமல்ல - சுற்றுலாத் துறையும் - தொழில் துறையும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைய இருக்கிறது.

இன்னும் சொன்னால், தமிழ்நாட்டினுடைய மதிப்பும், தமிழ்நாடு அரசினுடைய மதிப்பும் பெருமளவு இன்று முதல் மேலும் மேலும் உயர்கிறது. இந்த உயர்வு என்பது மிகச் சாதாரணமாகக் கிடைத்து விடுவது அல்ல. சரியான திட்டமிடல், கடின உழைப்பு, அதனுடைய விளைவே இந்த உயர்வு.

இந்தியத் துணைக் கண்டத்தில் முதல் முறையாகவும், ஆசியா கண்டத்தில் மூன்றாவது முறையாகவும் இந்த செஸ் போட்டிகள் நடக்க இருக்கின்றன. இயற்கை எழில் கொஞ்சும் மாமல்லபுரத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு அரசு செய்திருக்கிறது. மாமல்லபுரம் இந்தியக் கட்டடக்கலையின் அருங்காட்சியகம். அதற்குப் பக்கத்தில்தான் சதுரங்கப்பட்டினம் என்ற கடலோரப் பகுதி இருக்கிறது.

சென்னைப் பட்டனத்தை மெட்ராஸ் என்று அழைத்ததைப் போல சதுரங்கப்பட்டனத்தை சத்ராஸ் என்று அழைத்தார்கள். மன்னர் காலத்தில் இருந்து புகழ்பெற்ற ஊர் அந்த ஊர். இன்றைக்கு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் அந்த ஊர் கோட்டை இருக்கிறது. அத்தகைய சதுரங்கப்பட்டனத்துக்கு அருகில்தான் உலகப்புகழ் பெற்ற சதுரங்கப் போட்டி நடக்க இருக்கிறது.

இத்தகைய விழாவைத் தொடங்கி வைக்க வருகை தந்த மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு நான் நன்றி சொல்கிறேன், என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இது போன்ற வாய்ப்புகளை தொடர்ந்து நீங்கள் தமிழகத்துக்குத் தாருங்கள் என்றும் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

ஓர் அரசன், ஓர் அரசி, இரு அமைச்சர்கள், இரு குதிரைகள், இரு கோட்டைகள் எட்டுச் சிப்பாய்கள் என கருப்பு - வெள்ளை ராணுவ மைதானமாகவே காட்சி அளிப்பது சதுரங்கம். கீழடியைப் பற்றி நான் அதிகம் விளக்க வேண்டியது இல்லை. பல்லாயிரம் ஆண்டுப் பழமையைக் கொண்ட தமிழினம் வாழ்ந்த அடையாளம் கொண்ட பகுதியாக கீழடி நமக்கு வரலாறு சொல்லிக் கொண்டு இருக்கிறது.

பள்ளி மாணவர்களுக்கு செஸ் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு கோடி ரூபாய் நிதியை பள்ளிக்கல்வித் துறை ஒதுக்கீடு செய்திருக்கிறது. இப்படி செஸ் ஒலிம்பியாட் என்பது விளையாட்டுப் போட்டியாக மட்டுமல்ல, விளையாட்டு விழாவாக மட்டுமல்ல. இந்தியாவில் நடைபெறும் உலகளாவிய பண்பாட்டுத் திருவிழாவைப் போல் ஒரு சகோதரத்துவ மனப்பான்மையுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்

கீழடியில் ஏராளமான பொருள்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அங்கு இரண்டு வகையான ஆட்டக்காய்கள் கிடைத்துள்ளன. தந்தத்தினால் ஆன காய்கள் இவை. இவ்வகையான பொருட்கள், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளை விளையாடப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இவை அனைத்தும் சுடுமண்ணால் சுடப்பட்டு பெரும்பாலும் கருப்பு நிறம் கொண்டவையாக உள்ளன. குழந்தைகள் விளையாட்டில் பயன்படுத்தப்படும் சில்லுகள் கருப்பு சிவப்பு கொண்டவையாக உள்ளன.

போரில் யானையும் உண்டு, குதிரையும் உண்டு. கோட்டையும் உண்டு வீரர்களும் உண்டு. அரசனும் உண்டு, அரசியும் உண்டு. போர் மரபுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பு இருப்பதை கீழடி நமக்குச் சொல்கிறது. 'ஆனைக்குப்பு' என்று சதுரங்க விளையாட்டுக்கு தமிழ் இலக்கியத்தில் பெயர் இருந்துள்ளது. 'ஆனைக்குப்பு ஆடுவோரைப் போலவே' என்று நாலாயிர திவ்ய பிரபந்தம் சொல்கிறது.

அந்தளவுக்குப் பல்லாயிரம் ஆண்டு தொடர்பு, சதுரங்க விளையாட்டுக்கும் தமிழ்நாட்டும் உண்டு. அறிவுக்கூர்மையும் வியூகமும் கொண்ட விளையாட்டு இது. அத்தகைய உலகளாவிய அறிவு விளையாட்டு இன்று தொடங்குகிறது. அறிவுதான் இறுதிக்காலம் வரைக் காப்பாற்றும் கருவி என்று ஈராயிரம் ஆண்டுக்கு முன்பே சொன்ன வள்ளுவர் மண்ணில் உலகத்தின் அறிவுப் போட்டியானது தொடங்குகிறது.

ஒரு காலத்தில், அரசர்களின் விளையாட்டு என்று சொல்லப்பட்டது. இன்று அது மக்கள் அனைவரின் விளையாட்டாக மாறிவிட்டது. மூளை சார்ந்த போர்க்கலையாகச் சொல்லப்படும் விளையாட்டு இது. அதிர்ஷ்டத்தை நம்பிய விளையாட்டு அல்ல, அறிவை நம்பிய விளையாட்டு.

இந்த விளையாட்டினை தமிழ்நாட்டில் இந்தியாவில், மேலும் பரவச்செய்ய, இந்தப் போட்டிகள் பெரும் உதவியாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இன்றைய மாணவ சமுதாயத்திற்கு கல்வியோடு விளையாட்டையும் கலந்து அளிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக அறிவுத்திறனைப் பெருக்கும் சதுரங்கத்தின் பங்கும் இடம்பெற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமரின் படம் இடம் பெறுவதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.